கல்லீரல் மீளுருவாக்கம்

கல்லீரல் மீளுருவாக்கம் என்பது கல்லீரல் தான் இழந்த இழையங்களை புதிய இழையங்களால் இடமாற்ற, இருக்கும் இழையங்களை வளர்த்தும் நிகழ்வாகும். மனிதனின் உடலில் மீளுருவாகும் ஆற்றல் கொண்ட ஒரே உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும். [1] [2]

காரணிகள்

தொகு

கல்லீரல் ஏதேனும் நேர்ச்சியினால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது. நச்சுப் பொருட்களை வடிகட்டும் பணியை அது மேற்கொள்வதால் நச்சுத்தன்மை எல்லைமீறி கல்லீரல் இயக்கத்தோல்வி அடைவதற்கும் வாய்ப்புள்ளது. [3]

மீளுருவாக்க ஆற்றல்

தொகு

கல்லீரலில் காணப்படும் ஒருவகை குருத்தணுக்களே அதன் மீளுருவாக்க ஆற்றலுக்கு காரணம். [4] ஆனாலும் இது உண்மையான மீளுருவாக்கம் இல்லை, ஈடுசெய் வளர்ச்சி மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது[5]. பாதிக்கு பாதி அறுபட்ட கல்லீரலால் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக தன்னை வளர்த்திக் கொண்டு பழையபடி இயங்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. [6]ஆனால், பாலூட்டிகளின் கல்லீரலில் மீளுருவாக்கம் நடைபெறுகிற போதிலும், முழுமையான நிறை மட்டுமே மீளுருவாக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதன் வடிவம் மீளுவாக்கப்படாது. [7] எனினும் மீன்கள் உள்ளிட்ட எளிமை உயிரிகளில் கல்லீரல் தன் நிறையையும் வடிவத்தையும் மீளுருவாக்கிக் கொள்வதாக அறியப்படுகிறது. [8]

மாற்றறுவை சிகிச்சை

தொகு

கல்லீரல் மாற்றறுவை சிகிச்சையின் போது கல்லீரல் தானம் அளிப்பவரின் உடலில் இருந்து கல்லீரல் அறுக்கப்பட்டு பெறுபவரின் உடலில் பொருத்தப்படுகிறது. இவ்வகை அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் கல்லீரல் குருத்தணுவைப் பயன்படுத்தும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. [9][10]

தொன்மவியல் குறிப்புகள்

தொகு

கிரேக்கத் தொன்மவியலில் பிரொமீத்தியசு என்பவரும் தித்தியோசு என்பவரும் கடவுளின் கட்டளையை மீறியதற்காக, இரவில் பறவைகளால் அவர்களின் கல்லீரல் உண்ணப்பட்டு பகலில் அது மீண்டு வளர்ந்து மீண்டும் இரவில் உண்ணப்படும் என்பதாகிய கொடூரத் தண்டனையை அனுபவித்ததாக கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன.

மேற்கோள்

தொகு
  1. Michalopoulos GK (2013). "Principles of Liver Regeneration and Growth Homeostasis". Comprehensive Physiology. Vol. 3. pp. 485–513. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/cphy.c120014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-65071-4. PMID 23720294.
  2. "Liver regeneration". Science 276 (5309): 60–6. April 1997. doi:10.1126/science.276.5309.60. பப்மெட்:9082986. 
  3. "Tissue repair: an important determinant of final outcome of toxicant-induced injury". Toxicologic Pathology 33 (1): 41–51. 2005. doi:10.1080/01926230590881808. பப்மெட்:15805055. 
  4. "Where do we get Adult Stem Cells?". Boston Children's Hospital. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2013.
  5. Robbins and Cotran Pathologic Basis of Disease (7th ed.). 1999. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8089-2302-1.
  6. "New school in liver development: lessons from zebrafish". Hepatology 50 (5): 1656–63. November 2009. doi:10.1002/hep.23157. பப்மெட்:19693947. 
  7. "Liver regeneration". Journal of Hepatology 32 (1 Suppl): 19–31. 2000. doi:10.1016/S0168-8278(00)80412-2. பப்மெட்:10728791. 
  8. "New school in liver development: lessons from zebrafish". Hepatology 50 (5): 1656–63. November 2009. doi:10.1002/hep.23157. பப்மெட்:19693947. 
  9. "Liver Stem Cells Grown in Culture, Transplanted With Demonstrated Therapeutic Benefit". Science Daily. pp. Feb, 25. 2013. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2013.
  10. Alison MR, Islam S, Lim S. ". Stem cells in liver regeneration, fibrosis and cancer: the good, the bad and the ugly". J Pathol. 217(2). Centre for Diabetes and Metabolic Medicine, St Bartholomew's Hospital and the London School of Medicine and Dentistry, London, UK. m.alison@qmul.ac.uk. pp. 282–98. பார்க்கப்பட்ட நாள் சூன் 18, 2013.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லீரல்_மீளுருவாக்கம்&oldid=3093303" இலிருந்து மீள்விக்கப்பட்டது