கல்விப் பருவம்

ஒரு கல்விப் பருவம் (Academic term) அல்லது பருவம்) என்பது ஒரு கல்வியாண்டின் ஒரு பகுதி, கல்வி நிறுவனம் வகுப்புகளை நடத்தும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். பள்ளிக் கால அட்டவணை பரவலாக வேறுபடுகின்றன.

பெரும்பாலான நாடுகளில், கல்வி ஆண்டு கோடைகாலப் பிற்பகுதியில் அல்லது இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் தொடங்கி அடுத்த வசந்த காலத்தில் அல்லது கோடையில் முடிவடைகிறது. வடக்கு அரைக்கோள நாடுகளில், கல்வி ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் மே,சூன் அல்லது சூலை வரை நீடிக்கும். தெற்கு அரைக்கோள நாடுகளில், கல்வி ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் முதல் நவம்பர் அல்லது டிசம்பர் வரை நீடிக்கும் நாட்காட்டி ஆண்டுடன் சீரமைக்கப்படுகிறது.

ஒத்த சொற்கள் தொகு

செமஸ்டர், டிரைமஸ்டர் மற்றும் காலாண்டு ஆகிய அனைத்தும் ஒரு கல்விக் காலத்திற்கான ஒத்த சொற்களாகும் (கடைசி இரண்டும் அமெரிக்க ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது), [1] இது கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட காலங்களின் விதிமுறைகளைக் குறிக்கிறது:

  • செமஸ்டர் ( இலத்தீன்: sēmestris ) செருமனில், இது ஆறு மாத கால பல்கலைக்கழக அமர்வைக் குறிப்பிட்டது, 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கப் பயன்பாட்டில் பொதுவாக 15 முதல் 18 வாரங்கள் கொண்ட அரையாண்டுக் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. [2] [3]
  • டிரைமெஸ்டர் ( இலத்தீன்: trimestris) அமெரிக்கா மற்றும் கனடாவில் சில பல்கலைக்கழகங்களில் ஒரு கல்வியாண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதில் ஒரு பருவத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. [4] [5]
  • காலாண்டு ( இலத்தீன்: quartarius) சில பல்கலைக்கழகங்களில் ஒரு கல்வியாண்டு, நான்காகப் பிரிக்கப்பட்டதில் ஒரு பருவத்தைக் குறிக்க அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. [6]

இந்தியா தொகு

தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கல்வியாண்டில் சில பருவங்கள் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலும் மற்றவை சூன் முதல் மே வரையிலும் இருக்கும். கோடை விடுமுறைகள் மே மாத தொடக்கத்தில் தொடங்கி சூன் நடுப்பகுதி அல்லது இறுதி வரை நீடிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் 1-2 வாரங்கள் குளிர்கால விடுமுறையும் விடப்படுவதுண்டு. இருப்பினும், மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா போன்ற கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் இரண்டு விடுமுறைக் காலங்கள் இருக்கும், ஒன்று அக்டோபர் மாதத்தில் தசரா அல்லது தீபாவளிக்கு 7 முதல் 15 நாட்கள் வரையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு டிசம்பரின் பிற்பகுதி முதல் சனவரி தொடக்க வரையிலும் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை இருக்கும். முழுக் கல்வி ஆண்டும் சுமார் 30 வாரங்கள் வரை இருக்கும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பருவ முறை செயல்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் சூலை முதல் மே வரை ஒரு கல்வியாண்டாக உள்ளது. பொதுவாக மே இறுதியில் இருந்து சூலை தொடக்கம் வரை கோடைகால விடுமுறை இருக்கும். சில பல்கலைக்கழகங்களில் இலையுதிர் கால அல்லது தீபாவளி விடுமுறை அக்டோபர் அல்லது நவம்பரில் விடுமுறை விடப்படுகிறது. இது பொதுவாக நவம்பரில் இரண்டாம் பருவத் தேர்வுக்கு முன்னரோ அல்லது இரண்டாவது பருவத் தேர்வின் மத்தியிலோ இருக்கும்.

அனைத்து மாணவர்களும் முந்தைய ஆண்டிற்கான இறுதித் தேர்வுகள் முடிந்த பிறகு, 1 முதல் 3 வார தேர்வு விடுமுறைக்குப் பின்னர் புதிய கல்வியாண்டுக்கு மாறுகிறார்கள்.

மேலும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. "Synonyms of 'term'". Collins English Thesaurus. HarperCollins. session. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
  2. "Semester". Oxford Living Dictionary. Oxford University Press. Archived from the original on July 13, 2017. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
  3. "Definition of 'semester'". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
  4. "Trimester". Oxford Living Dictionary. Oxford University Press. Archived from the original on July 29, 2018. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
  5. "Definition of 'trimester'". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
  6. "Quarter". Oxford Living Dictionary. Oxford University Press. Archived from the original on September 27, 2016. பார்க்கப்பட்ட நாள் 28 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்விப்_பருவம்&oldid=3607829" இலிருந்து மீள்விக்கப்பட்டது