கல் பிடித்தல்
கல் பிடித்தல் தமிழ்நாட்டின் நாட்டுப்புறங்களில் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. [1] விரல் அளவு பருமன் கொண்ட உருண்டைக் கற்கள் இதற்குப் பயன்படுத்தப்படும். நான்கைந்து பேர் வட்டமாக உட்கார்ந்து ஆடுவார்கள். ஐவர் ஆடினால் நான்கு மணியாங்கல் பயன்படுத்தப்படும். கல் இல்லாதவரிடம் அருகில் உள்ளவர் தன் கல்லைத் தலை உயரத்துக்கு மேல் தூக்கிப் போடுவார். கல் இல்லாதவர் பிடித்து அவருக்கு அடுத்தவரிடம் தூக்கிப் போடுவார். அவர் பிடித்து அடுத்தவரிடம் போடுவார்.
யார் கையிலும் இரண்டு கல் இருக்கக்கூடாது. அடுத்தவர் போடும் கல்லைக் கீழே விழாமல் பிடித்துக்கொள்ளவும் வேண்டும். கல்லைப் பிடிக்காமல் கீழே விட்டாலோ, கையில் இரண்டு கல் வைத்திருந்தாலோ அவர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். தவறு செய்யாமல் பிடித்தெறிந்து ஆடிக் கடைசியில் எஞ்சி நிற்பவர் பழம்.
பழமேறியவர் தோற்றவர்களுக்குத் தண்டனை வழங்குவார். தோற்றவர்கள் விரல்கள் இணைந்து விரிந்திருக்க உள்ளங்கையைத் தரையில் வைக்க வேண்டும். வென்றவர் நின்றுகொண்டு தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி ஆடிய கல்லில் ஒன்றை அவரது புறங்கையில் செங்குத்தாகப் போடுவார். அது தோற்றவர் புறங்கையில் விழுந்தால் வலிக்கும்.
ஒப்பீடு
தொகுஇது சங்கம் மருவிய கால அம்மானை விளையாட்டைப் போன்றது.
அம்மானை | கல் எடுத்தல் |
---|---|
பந்து தட்டப்படும் | கல் பிடித்துத் தூக்கிப் போடப்படும் |
உழக்கில் பிடித்தும் தட்டப்படும் | கையால் மட்டும் பிடித்துப் போடப்படும் |
மகளிர் விளையாட்டு | சிறுமியர் விளையாட்டு |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள் குறிப்பு
தொகு- ↑ பாலசுப்பிரமணியம், இரா., தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை 20 வெளியீடு, 1980, பக்கம் 119