களப்பலி என்பது பண்டைத் தமிழரின் போரியல் சார்ந்த நிகழ்வுகளில் ஒன்றாகும். அதாவது போரிலே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போர்த்தெய்வமான கொற்றவைக்கு தானாகவே விரும்பி முன்வருகின்ற ஒரு வீரனின் தலையைக் கத்தியினால் அறுத்துக் கொடுக்கும் பலியாகும். உரிய போர்க்களத்திலே நடைபெறுவதால் களப்பலி எனப்படுகின்றது. கலிங்கத்துப் பரணியில் சோழ அரசின் வெற்றிக்காக களப்பலி கொடுத்த செய்திகள் காணப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தில்,

"வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென

நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு

உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து

மயிர்க்கண் முரசொடு வான்பலி" - இந்திரவிழவுரெடுத்த காதை 85-88


பழந்தமிழர் மரபில் அரிகண்டம், நவகண்டம் போன்ற பல்வேறு பலியிடும் முறைகள் காணப்பட்டிருக்கின்றன.

தமிழகக் கோயில்களில் நவகண்டச் சிற்பங்களைக் காணலாம். குறிப்பாக திருவாசி, திருமுக்கூடலுர் போன்ற பல்வேறு இடங்களில் காணமுடிகின்றது.


மகாபாரதக் கதையிலும் பாண்டவர்கள் போரில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அரவான் களப்பலி கொடுக்கப்பட்டான் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=களப்பலி&oldid=3412608" இலிருந்து மீள்விக்கப்பட்டது