களப் பள்ளி
களப் பள்ளி (field school) என்பது ஒரு குறுகிய காலக் கல்வித் திட்டமாகும். இது கல்விக் காலத்திலான களப் பயண ஆய்வினை உள்ளடக்கியதாகும்.[1][2] தனது ஆரம்பக் கல்வியில் பயின்றதை செய்து பார்ப்பதன் மூலம் கற்றுக் கொள்கின்றனர். செய்து கற்றலை இது அடிப்படையாகக் கொண்டது.[3]
வடிவம்
தொகுகளப் பள்ளிகள் பொதுவாக கல்வி ஊழியர்களால் நடத்தப்படுகின்றன, சில சமயங்களில் களப் பயணங்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.[4] ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வேலை செய்யும் அளவிற்கு கடினமானதாக இருக்கும்.ஆய்வு நடத்தும் செயல்முறை மூலம் கற்றலில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
களப் பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் பொதுவாக மிகக் குறைவாகவே தீர்மானிக்கப்படுகிறது. இது அரிதாக 1:20 எனும் எண்னிக்கையினை மீறுகிறது மற்றும் பல கல்வி நிறுவனங்களில் இது 1:6 எனத் தீர்மானிக்கப்படுகிறது. இங்கு விரிவுரைகள் மாலை நேரங்களில் வழங்கப்படுகிறது.
சில பிரிவுகளுக்கு/ துறைகளுக்கு இளங்கலை அல்லது இளம் அறிவியல் பட்டம் பெறுவதற்கான நிபந்தனையாக களப் பள்ளி பங்கேற்புத் தேவைப்படுகிறது. தொல்லியல், புவியியல் மற்றும் தொல்லுயிரியல் ஆகியவை உதாரணங்களாகும், இருப்பினும் குறிப்பிட்ட தேவைகள் பல்கலைக்கழகங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Northern Ireland Field School Jacob R. Hickman, Brigham Young University
- ↑ field school, Archaeologywordsmith.com
- ↑ Northern Ireland Field School Jacob R. Hickman, Brigham Young University
- ↑ Fieldwork, Bryn Mawr College