களுதாவளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கழுதாவளை அல்லது களுதாவளை (Kazhuthavalai, Ka'luthaava'lai) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி கிராமசேவகர் பிரிவில் தென் மண்முனை எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் ஊராகும்.
மட்டக்களப்பு நகருக்குத் தெற்கே மட்டக்களப்பில் இருந்து கல்முனை செல்லும் ஏ4 நெடுஞ்சாலையில் 22 கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது. வங்காள விரிகுடா இதன் கிழக்கு எல்லையாகவும், மட்டக்களப்பு வாவியை மேற்கு எல்லையாகவும் களுவாஞ்சிக்குடி என்னும் ஊரை தெற்கு எல்லையாகவும் தேற்றாத்தீவு, தேற்றாத்தீவுக் குடியிருப்பு என்னும் கிராமங்களை இதன் வடக்கு எல்லையாகவும் கொண்டுள்ளது. கிழக்கு மேற்காக 3 கிமீ தூரத்தையும் வடக்கு தெற்காக இரண்டரை கிமீ தூரத்தையும் உள்ளடக்கியதாக இக்கிராமம் அமைந்துள்ளது. நெடுஞ்சாலையின் மேற்குப் புறத்தே நெல் வயல்களும் கிழக்குப் பக்கத்தில் கழுதாவளை கிராமமும் அமைந்துள்ளது.
இவ்வூரின் சிறப்புகள்
தொகு- காலி விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலங் கிராம்பிற்கும் ஏற்றது காண் உன் எழில் வாய் என்று மட்டக்களப்பு நாட்டுப் பாடல் களுதாவளை வெற்றிலையின் சிறப்பை பாடுகின்றது.
இங்குள்ள கோயில்கள்
தொகு- களுதாவளை பிள்ளையார் கோயில்
- களுதாவளை சிவசக்தி முருகன் கோயில்