கழுதை வால் செடி

தாவர இனம்

கழுதை வால் அல்லது பர்ரோவின் வால் (donkey tail or burro's tail என்பது தெற்கு மெக்சிக்கோவை பூர்வீகமாகக் கொண்ட கிராசுலேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். இது சதைப்பற்றுள்ள 60 செ.மீ (24 அங்குலம்) நீளம்வைரை தொங்குகிற தண்டுகளை கொண்டிருக்கும். அதில் சதைப்பற்றுள்ள நீல-பச்சை நிற இலைகளைக் கொண்டிருக்கும். இந்தச் செடியில் கோடையில் இளஞ்சிவப்பு முதல் சிவப்பு நிற மலர்கள் பூக்கும். கழுதை வால் தாவரமானது, கிழக்கு மெக்சிகோவில் மத்திய வெராக்ரூசி மாநிலத்தில் உள்ள தெனாம்பா மாவட்டத்தில் உள்ள இரண்டு பள்ளத்தாக்குகளிலும் மற்றும் வெப்பமண்டல இலையுதிர் காடு மண்டலத்தில் உள்ள எரிமலைப் பாறைகளின் செங்குத்து பாறைகளிலும் காடுகளாகக் காணப்படுகின்றது. இதன் பரவலுக்கு ஏற்றதாக இல்லாத புவியியல் காரணமாக, இது ஒரு நுண் அகணிய இனமாக கருதப்பட வேண்டும்.[1]

கழுதை வால்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. morganianum
இருசொற் பெயரீடு
Sedum morganianum
E. Walther

வளர்ப்பு தொகு

குறைந்தபட்ச வெப்பநிலை 5–7 °C (41–45 °F) வரை உள்ள மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இது பெரும்பாலும் வீட்டுத் தாவரமாக தொங்கவிடப்பட்ட சாடிகளில் வளர்க்கப்படுகிறது. அதிலிருந்து அதன் இலைகளுடன் கூடிய தண்டுகள் செங்குத்தாக தொங்கும்.[2]

இந்த தாவரம் ராயல் ஹார்டிகல்ச்சர் சொசைட்டியின் கார்டன் மெரிட் விருதைப் பெற்றுள்ளது.[3][4]

கழுதை வால் வெளியில் அல்லது வீட்டிற்குள் நன்றாக வளரும். மிக அதிகப்படியான வெளிச்சம் இருக்கலாம் ஆனால் அதிக வெப்பத்தை தாங்காது. வலுவான வளர்ச்சிக்காகவும், இலைகளின் நிறத்தை அதிகரிக்கவும் முழு சூரிய ஒளியில் தாவரம் நன்கு வளர்க்கப்படுகிறது. இதற்கு ஆண்டு முழுவதும் குளிர்காலத்தைத் தவிர மிதமாக நீர் ஊற்றவேண்டியது அவசியம். அதிகப்படியான நீரும் குறுகிய காலத்தில் தாவரத்தை சேதப்படுத்தும்.

இத்தாவரத்தின் தண்டுகள் ஒளி அதிகம் கிடைக்கும் திசையை நோக்கி வளரும். அதாவது வடக்கு அரைக்கோளத்தில், தெற்கில் அதிகமாக ஒளி வருவதால் அதை நோக்கியும், தெற்கு அரைக்கோளத்தில் வடக்கு நோக்கியும் பரவி வளரும்.

இந்தத்தாவரம் பொதுவாக தண்டு அல்லது இலையை வெட்டி எடுத்து அதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் இலைகளை தாங்கியுள்ள இணைப்புகள் மிகவும் மென்மையானவை. இவற்றைக் கையாளும் போது இலைகள், தண்டுகள் போன்றவை உடைந்துவிடும் வாய்ப்பு அதிகம். இலைகள் பல நாட்கள் உயிருடன் இருக்கும் சில நாட்களுக்குப் பிறகு தோதான ஈரப்பதத்தம் இருந்தால் வேர்கள் தோன்றும். அந்த இலைகளிலிருந்து செடி உருவாகும்.

இந்த தாவரத்தின் இலைகளிலும், தண்டுகளில் தெளிவாக தெரியும் மெழுகு அடுக்கைக் கொண்டுள்ளது.[5]

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. Jimeno-Sevilla, H. David; Cházaro-Basáñez, Miguel; Albalat-Botana, Amparo (2010-04-01). "Reporte de una población silvestre de Sedum morganianum E. Walther (Crassulaceae)". Acta Botanica Mexicana (91): 13. doi:10.21829/abm91.2010.287. பன்னாட்டுத் தர தொடர் எண்:2448-7589. 
  2. RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. p. 1136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1405332965.RHS A-Z encyclopedia of garden plants. United Kingdom: Dorling Kindersley. 2008. p. 1136. ISBN 978-1405332965.
  3. "RHS Plant Selector - Sedum morganianum". பார்க்கப்பட்ட நாள் 5 March 2021.
  4. "AGM Plants - Ornamental" (PDF). Royal Horticultural Society. July 2017. p. 96. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  5. Wollenweber, Eckhard; Doerr, Marion; Siems, Karsten; Faure, Robert; Bombarda, Isabelle; Gaydou, Emile M (January 1999). "Triterpenoids in lipophilic leaf and stem coatings". Biochemical Systematics and Ecology 27 (1): 103–105. doi:10.1016/s0305-1978(98)00070-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0305-1978. https://archive.org/details/sim_biochemical-systematics-and-ecology_1999-01_27_1/page/103. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுதை_வால்_செடி&oldid=3928711" இலிருந்து மீள்விக்கப்பட்டது