காகன் மஹந்தா
காகன் மஹந்தா அசாமின் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய இசையின் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். காகன் மஹந்தா அசாமிய நாட்டுப்புற இசையில் குறிப்பிடத்தக்க நபராவார். மேலும் அவர் "பிஹுவின் ராஜா" என்று அழைக்கப்படுகிறார். அவரது பிஹு பாடல்கள், போர்கீட் மற்றும் பிற நாட்டுப்புற பாடல்கள் அசாமில் பிரபலமானவையாகும். அவரது மனைவி அர்ச்சனா மஹந்தா மற்றும் பாபோன் என்றழைக்கப்படும் மகன் அங்கராக் மஹந்தா ஆகியோர் அடங்கிய குடும்பம், அசாமிய இசையில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாகும். அவர் ஜூன் 12, 2014 அன்று காலமானார்.
காகன் மஹந்தா | |
---|---|
காகன் மஹந்தா, அர்ச்சனா மஹந்தா மற்றும் ஹிரன் பட்டாச்சாரியா[சான்று தேவை] | |
பிறப்பு | நாகோன், அசாம், இந்தியா | 17 ஆகத்து 1942
இறப்பு | 12 சூன் 2014 குவஹாத்தி, அசாம் | (அகவை 71)
மற்ற பெயர்கள் | பிகு சாம்ராட் |
பணி | பாடகர், இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1958–2014 |
வாழ்க்கைத் துணை | அர்ச்சனா மஹந்தா |
பிள்ளைகள் | அங்காரக் மஹந்தா ,கின்கினி மஹந்தா[1] |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅஸ்ஸாமில் உள்ள நாகோனில் கலிதா ஜாதி ஹரேந்திர நாத் மஹந்தா மற்றும் லக்ஷ்மிப்ரியா தேவி ஆகியோருக்கு காகன் மஹந்தா பிறந்தார். சிறுவயதிலிருந்தே இசையில் ஏடுபாடு கொண்டு தன் திறமையை வெளிப்படுத்தினார். தன் பதினைந்தாவது வயதில் அவர் ஷில்லாங்கில் கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தொழில்
தொகு1958 ஆம் ஆண்டில், அவர் டெல்லி தூர்தர்ஷன் (தொலைக்காட்சி) மையத்தில் நிறுவப்பட்ட ஆரம்ப காலத்தில் தொடங்கி கவனத்தைப் பெற்றார். மேலும் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அவரது நிகழ்ச்சி பெரும் வெற்றியும் பெற்றது.
1960 இல் "மொழி இயக்கத்தின்" போது, பிஷ்ணுபிரசாத் ரபா, ஹேமங்கா பிஸ்வாஸ் மற்றும் ஜுகல் தாஸ் போன்ற ஆளுமைகளின் தலைமையில் காகன் மஹந்தா தீவிரமாக ஈடுபட்டார். அவர் "ஹார்மனி" குழுவில் உறுப்பினராக இருந்து அவரது மெல்லிசைக் குரல் மற்றும் இசையமைப்புடன் மனித விழுமியங்களை மேம்படுத்தும் பணியில் ஏடுபட்டார் . 1961ல், குவஹாத்தி அகில இந்திய வானொலி மையத்திலிருந்து அவரது முதல் கிராமபோனில் பதிவு செய்யப்பட்ட பாடல் ஒலிபரப்பப்பட்டது. கல்கத்தாவில் நடந்த "உலக அமைதித்" திருவிழாவிலும் பங்கேற்றார். அகில இந்திய வானொலியில் முதல்தர கலைஞராக அங்கீகரிக்கப்பட்டார். மேலும் லோககீத், ஒகோனி கீத், இசைக்கருவிகள் மற்றும் நாடகங்கள் போன்ற அசாமிய இசையின் கிட்டத்தட்ட அனைத்து பிரிவுகளிலும் பங்களித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமஹந்தா அசாமிய நாட்டுப்புற பாடகியான அர்ச்சனா மஹந்தாவை மணந்தார். அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இணைந்து, அசாமிய நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்தி, மிகவும் பிரபலமான இணைப்பாடகர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.[சான்று தேவை] அவர்களின் மகன் அங்கராக் மஹந்தாவும் அவரது பெற்றோரைப் போலவே ஒரு பாடகர் மற்றும் நவீன அசாமிய இசை வகைகளில் பிரபலமானவர் ஆவார். அவர் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு புஹோர் மற்றும் பாரிஜாத் என்ற இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவருக்கு கிங்கினி மஹந்தா என்ற மகளும் உள்ளார்.
இறப்பு
தொகுகாகன் மஹந்தா 12 ஜூன் 2014 அன்று மதியம் குவஹாத்தியில் உள்ள தனது சொந்த வீட்டில் திடீரென மரணமடைந்தார். மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்செய்தி பிற்பகல் 3:40 மணி அளவில் வெளியிடப்பட்டது. மஹந்தாவின் குடும்பத்தில் அவரது மனைவி அர்ச்சனா மஹந்தா (2020 இல் இறந்தார்) மற்றும் மகன் அங்கராக் மஹந்தா ஆகியோர் உள்ளனர். மாநில அரசு 13 ஜூன் 2014 அன்று மஹந்தாவை கௌரவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் அரைநாள் விடுமுறை அறிவித்தது.
விருதுகள்
தொகுகாகன் மஹந்தா தனது பங்களிப்புகளுக்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல முறை கௌரவிக்கப்பட்டுள்ளார். 1992 இல் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய இசைக்கான சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. [2]
அவரது சில விருதுகள்/அங்கீகாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- 1988 - திரைப்பட கைவினை விருது
- 1992 - சங்கீத நாடக அகாடமி
- 1994 - ஸ்ரீமோய் விருது
- 1999 - சங்கீதாச்சார்யா
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff Reporter (13 June 2014). "Legendary Assamese Singer Khagen Mahanta dies at 72". Times of Assam. பார்க்கப்பட்ட நாள் 13 June 2014.
- ↑ Other Forms of Music, Dance and Theatre பரணிடப்பட்டது 14 மே 2007 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்