காக்குஷி-தோரிடே நோ சான்-ஆகுனின்
காக்குஷி-தோரிடே நோ சான்-ஆகுனின் ஆங்கிலத்தில் (The Hidden Fortress) 1958 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.அகிரா குரோசாவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டோஷிரோ மிபூன்,மிசா யுஹெரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
காக்குஷி-தோரிடே நோ சான்-ஆகுனின் | |
---|---|
இயக்கம் | அகிரா குரோசாவா |
தயாரிப்பு | சன்சுமி பிஜிமோட்டோ அகிரா குரோசாரா |
கதை | ஷினோபு ஹஷிமோட்டோ ருஷோ கிகிஷுமா அகிரா குரோசாவா ஹிடியோ ஒகுனி |
இசை | மசரு சாட்டோ |
நடிப்பு | டோஷிரோ மிபூன் மிசா யுஹெரா |
விநியோகம் | Toho Company Ltd. |
வெளியீடு | ஜப்பான் டிசம்பர் 28 1958 அமெரிக்கா அக்டோபர் 6 1960 |
ஓட்டம் | 139 நிமிடங்கள். |
மொழி | ஜப்பானிய மொழி |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மக்காபெ தனது நாட்டு இளவரசியாரைக் காப்பாற்றுவதே முக்கிய கொள்கையாக இருக்கும் ஒரு வீரன். மேலும் இவரது வழியில் தங்கம் கிடைக்கும் என வந்த இரு முட்டாள்கள் மாட்டிக்கொள்ளவே அவர்களிற்குத் தங்கம் இருக்கும் இடத்தை தெரிவிக்கப்போவதாக கூறிக்கொள்ளும் மக்காபெ அவர்கள் இருவரையும் அலைக்கழிக்கின்றார்.ஆரம்ப காலங்களில் மக்காபெ எனும் கொள்ளைக்காரனைத்தேடி வரும் அவ்விருவரும் வருகின்றனர் ஆனால் அவரிடமே கூலிகளாக வேலை செய்வதென்பதறியாது பின்பு அவ்வுண்மையத் தெரிந்து கொள்கின்றனர்.இவரிடமிருந்து தப்பிச்செல்ல பலமுறை முயன்றும் முடியவில்லை தோற்றுப்போகின்றனர்.இளவரசியார் ஒருவரை இவர் கடத்தி வந்ததாக தம் ஊரில் அறிந்து வந்த இவ்விரு முட்டாள்களும் அவ்விளவரசியாரைக் காப்பாற்றுவதற்காகவே மக்கபெ இவ்வாறு தலைமறைவான இடத்தில் தங்கியுள்ளார் என்பதனைப் அறியாது உள்ளனர்.இதற்கிடையில் இளவரசியாரை மக்கபே எவ்வாறு காப்பாற்றுகின்றார் என்பது திரைக்கதை முடிவு.