நகைச்சுவைத் திரைப்படம்
(நகைச்சுவைப்படம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நகைச்சுவைத் திரைப்படம் (comedy film) என்பது ஒரு திரைப்பட வகையாகும். இவை மனிதரின் மனக்கவலைகளை மறக்க வைக்கும் நகைச்சுவை உணர்வை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள். இவ்வகையான திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களில் அதிக அளவில் காணப்படும். இந்தப் படங்கள் பார்வையாளர்களின் சிரிப்பை வரவழைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளவை. நகைச்சுவைப் படங்கள் பொதுவாக கவலை இல்லாத நாடகம் மற்றும் வேடிக்கைத் திரைப்படங்கள். பல சமயங்களில் சமூகத் திரைப்படங்கள் நகைச்சுவை கலந்து எடுக்கப்படுகின்றன. நகைச்சுவைத் திரைப்படங்கள் பெரும்பாலும் நகைச்சுவையான சூழ்நிலைகள் மூலம், நடிகர்கள் பேசும் வழிகளில், அல்லது அவர்களின் நடவடிக்கைகள் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும்.[1]
பிரபல நகைச்சுவைப் படங்கள்
தொகு- சபாபதி
- பலே பாண்டியா
- காதலிக்க நேரமில்லை
- கலாட்டா கல்யாணம்
- மைக்கேல் மதன காமராஜன்
- சதிலீலாவதி
- தெனாலி
- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
- பம்மல் கே. சம்பந்தம்
- பஞ்சதந்திரம்
- இம்சை அரசன் 23-ம் புலிகேசி
- தில்லு முல்லு
- உள்ளத்தை அள்ளித்தா
- கலகலப்பு
- கலாட்டா கல்யாணம்
- காசேதான் கடவுளடா
- பாமா விஜயம்
- எதிர் நீச்சல்
- உத்தரவின்றி உள்ளே வா
- அன்பே ஆருயிரே
- சின்ன மாப்ளே
- சின்ன ஜமீன்
- கண்ணா லட்டு தின்ன ஆசையா
பிரபல நகைச்சுவைப்பட இயக்குநர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Comedy Films". Filmsite.org. பார்க்கப்பட்ட நாள் 29 April 2002.