காங்கேயபூஷணி
காங்கேயபூஷணி இராகம், கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 33வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 33வது இராகத்திற்கு கங்காதரங்கிணி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி3 க3 ம1 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க3 ரி3 ஸ |
- ருது என்றழைக்கப்படும் 6வது சக்கரத்தில் 3வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் தாதுவர்த்தனி (69) ஆகும்.
- இதன் மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக நீதிமதி (60) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
- இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு.
உருப்படிகள்
தொகு- கிருதி: எவ்வரே ராமய்ய, தியாகராஜ சுவாமிகள், தேசாதி தாளம்
- கிருதி: பாலயாஸுமா சைல, மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, ஆதி தாளம்
- கிருதி: வரதராஜவாவ, முத்துசாமி தீட்சிதர், ருபக தாளம்