காசிகுண்ட்

ஜம்மு காஷ்மீர் மாநில நகரம்

காசிகுண்ட் (Qazigund), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்த சிறு நகரம் ஆகும். காசிகுண்ட் நகரம் கடல்மட்டத்திலிருந்து 1670 மீட்டர் (5478 அடி) உயரத்தில் இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் 33°35′N 75°10′E / 33.59°N 75.16°E / 33.59; 75.16 பாகையில் அமைந்துள்ளது.

காசிகுண்ட்
நகரம்
காசிகுண்ட் is located in ஜம்மு காஷ்மீர்
காசிகுண்ட்
காசிகுண்ட்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காசிகுண்ட்
காசிகுண்ட் is located in இந்தியா
காசிகுண்ட்
காசிகுண்ட்
காசிகுண்ட் (இந்தியா)
ஆள்கூறுகள்: நகரத்தின் அமைவிடம் 33°35′32″N 75°09′56″E / 33.592132°N 75.165432°E / 33.592132; 75.165432
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்அனந்தநாக்
ஏற்றம்1,670 m (5,480 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,871
மொழிகள்
 • அலுவல் மொழிகள்காஷ்மீரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுJK03

அமைவிடம் தொகு

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 44 மீது அமைந்துள்ள காசிகுண்ட் நகரம், அனந்தநாக்கிலிருந்து 21 கிமீ தொலைவிலும்; ஸ்ரீநகரிலிருந்து 72 கிமீ தொலைவிலும்; ஜம்முவிலிருந்து 187 கிமீ தொலைவிலும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 5 வார்டுகள் கொண்ட காசிகுண்ட் நகராட்சியின் மக்கள்தொகை 9,871 ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர் 90.33%; இந்துக்கள் 9,871%; சீக்கியர்கள் 1.49% மற்றவர்கள் 0.39% ஆகவுள்ளனர். [1]

போக்குவரத்து வசதிகள் தொகு

 
காசிகுண்ட் தொடருந்து நிலையம்

காசிகுண்ட் நகரம், பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர், பட்காம், பாரமுல்லா, பனிஹால் போன்ற நகரங்களை தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா) மற்றும் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது. [2] பிர் பாஞ்சல் மலைத்தொடர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 44, காசிகுண்ட் நகரம், பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை மற்றும் ஜவகர் குகை வழியாக ஜம்மு நகரத்துடன் இணைக்கப்படுகிறது.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிகுண்ட்&oldid=2996199" இலிருந்து மீள்விக்கப்பட்டது