காசியாபாத்து காவல்துறை ஆணையரகம்

உத்தரப் பிரதேச காவல்துறை அலுவலகம்

காசியாபாத்து காவல்துறை ஆணையரகம் (Ghaziabad Police Commissionerate) இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்து நகரத்திற்கான ஒரு முதன்மை சட்ட அமலாக்க நிறுவனமாகும் . உத்தரப்பிரதேச காவல்துறையின் ஒரு பிரிவான இந்நிறுவனம் காசியாபாத் எல்லைக்குள் சட்ட அமலாக்கம் மற்றும் விசாரணையின் முதன்மைப் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. இது காவல்துறை பொது ஆய்வாளர் தகுதியில் அல்லது இந்திய காவல் பணியில் உள்ள அதிகாரி தலைமையில் இயங்குகிறது. .

காசியாபாத்து காவல்துறை ஆணையரகம்
Ghaziabad Police Commissionerate
காசியாபாத்து காவல்துறை ஆணையரகம்
காசியாபாத்து காவல்துறை ஆணையரகம்
குறிக்கோள்सुरक्षा आपकी, संकल्प हमारा (இந்தி)
உங்கள் பாதுகாப்பு, எங்கள் உறுதிமொழி'
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்26 நவம்பர் 2022
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புகாசியாபாத், இந்தியா
சட்ட அதிகார வரம்புகாசியாபாத்
ஆட்சிக் குழுஉத்தரப் பிரதேச அரசு உள்துறை அமைச்சகம்
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்காவல்துறை ஆணையர் அலுவலகம், காசியாபாத்
அமைச்சர்
துறை நிருவாகி
  • அச்சய் குமார் மிசுரா (ஐ.பி.எசு), காவல்துறை ஆணையர்
அமைச்சுஉத்தரப் பிரதேசக் காவல்துறை

இந்திய காவல் பணி அலுவலர் அச்சய் மிசுரா காசியாபாத்தின் தற்போதைய மற்றும் முதல் காவல்துறை ஆணையராக உள்ளார். [1]

வரலாறு

தொகு

நவம்பர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் காசியாபாத்து மாவட்ட காவல்துறை காசியாபாத் காவல் மண்டலத்தின் கீழ் வந்தது. இது உத்தரப் பிரதேச காவல்துறையின் காசியாபாத்து காவல் எல்லைக்கு உட்பட்டதாகும். . காசியாபாத்து மண்டலம் கூடுதல் காவல்துறை இயக்குநர் பதவியில் உள்ள ஓர் இந்திய காவல்பணி அதிகாரி தலைமை வகிக்கிறார். அதேசமயம் காசியாபாத்து சரகத்தின் காவல் துறை பொது ஆய்வாளர் தரத்தில் உள்ள இந்திய காவல்பணி அதிகாரி தலைமை பொறுப்பில் உள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று, மாநிலத்தின் பிற நகரங்களில் முந்தைய 4 காவல் ஆணையர்களின் வெற்றியைத் தொடர்ந்து மாநிலத்தில் மேலும் 3 காவல் ஆணையர்களை உருவாக்கும் உத்தரவை மாநில அமைச்சரவை நிறைவேற்றியது. [2]

  1. காசியாபாத்து
  2. ஆக்ரா மற்றும்
  3. பிரயாக்ராச்சு

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bureau, The Hindu (2022-11-29). "Agra, Ghaziabad and Prayagraj get first police commissioners" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/other-states/agra-ghaziabad-and-prayagraj-get-first-police-commissioners/article66199018.ece. 
  2. "Police commissionerate system in Agra, Ghaziabad & Prayagraj" (in ஆங்கிலம்). 2022-11-26. பார்க்கப்பட்ட நாள் 2022-11-29.