காசி அப்துல் வதூத்

காசி அப்துல் வதூத் (Kazi Abdul Wadud)(26 ஏப்ரல் 1894 - 19 மே 1970) ஒரு வங்காள கட்டுரையாளர், விமர்சகர், நாடகாசிரியர் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆவார். இவர் பெரிய பரித்பூரில் (தற்போதைய) ராஜ்பரி, பாங்ஷாவில் ஒரு கீழ்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் காசி சயீத் ஹோசன் (காசி சாகிருதினும் கூட).

காசி அப்துல் வதூத்
Kazi Abdul Wadud
பிறப்பு(1894-04-26)ஏப்ரல் 26, 1894
பரித்பூர் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (= வங்காளதேசம்)
இறப்புமே 19, 1970(1970-05-19) (அகவை 76)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மாநிலக் கல்லூரி, கொல்கத்தா
கொல்கத்தா பல்கலைக்கழகம்
வாழ்க்கைத்
துணை
ஜமீலா காதுன் (தி. 1916⁠–⁠1954)

கல்வி தொகு

1913-ல், வதூத் டாக்கா கல்லூரிப் பள்ளியில் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு கல்வியினை கற்றுத் தேர்ச்சியினைப் பெற்றார். பின்னர் இவர் கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் ஐ. ஏ. மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1919-ல் இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பங்களிப்புகள் தொகு

1926-ல், வதூத் டாக்காவில் முஸ்லீம் சாஹிட்டோ சோமாஜ்[1] நிறுவினார். மேலும் இவர் சில இளம் எழுத்தாளர்களுடன் புத்தர் முக்தி (அறியாமையிலிருந்து எழுச்சி) இயக்கத்தை[2] வழிநடத்தினார். வதூத்தின் செய்தித்தாள் ஷிகா [3] இயக்கத்தின் வளர்ச்சியை அதிகரிக்க உதவியது. சையத் அப்துல் ஹொசென் மற்றும் காசி மோதஹர் ஹொசைன் ஆகியோரும் இந்த இயக்கத்தில் இணைந்தனர். காசி அப்துல் வதூத் வங்காள முசுலீம் இலக்கிய இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்.

பணி தொகு

வதூத் கொல்கத்தா பாடநூல் குழுவில் வேலை செய்தார். 1920-ல் இவர் டாக்கா இடைநிலைக் கல்லூரியில் (இப்போது டாக்கா கல்லூரி) இலக்கியப் பேராசிரியராகச் சேர்ந்தார். ஏனெனில் பெங்காலி மொழியில் பட்டதாரி பதவி கிடைப்பது மிகவும் அரிது. 1947க்குப் பிறகு, தாக்கா பல்கலைக்கழகம் இவரை கற்பிப்பதற்காக முன்மொழிந்தது. ஆனால் வதூத் கொல்கத்தாவில் எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றார். இதனால், இவர் தனது வாழ்நாள் முழுவதும் கொல்கத்தாவிலிருந்தார்.

திருமணம் தொகு

1916-ல், வதூத் தனது மாமாவின் மூத்த மகள் ஜமீலா காதுனை மணந்தார். இவரது மனைவி 1954-ல் இறந்தார்.[4]

கட்டுரைகள் தொகு

  • சாஸ்வோடோ போங்கோ
  • சோமஜ் ஓ சாஹிட்டோ

மற்ற புத்தகங்கள் தொகு

  • மீர் போரிபார் (கதை), 1918
  • நோடிபோக்ஷே (நாவல்), தேதி தெரியவில்லை
  • ராபிந்த்ரோ கபோ பத்தோ (விமர்சனம்), பெங்காலி 1334 கி.பி
  • டொருன் (கதை மற்றும் சிறு நாடகங்களின் தொகுப்பு) கொல்கத்தா, பெங்காலி 1355 கி.பி
  • பொத் அல்லது பைபோத்(நாடகம்) பெங்காலி 1346
  • நஸ்ருல் புரோதிவா (விமர்சனம்), 1949
  • ஆசாத்(நாவல்), 1948
  • கிரியேட்டிவ் பெங்கால் (பெங்காலி கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு), 1950
  • போபிட்ரோ குரானர் புரோதோம் பகுதி (டார்ஜோமா) பெங்காலி 1337 அட்

விருதுகள் தொகு

1970 - "சிசிர் குமார் விருது"[5]

மேற்கோள் தொகு

"எனக்கு மனிதனுக்கு வறுமை வேண்டாம், பெரிய செழிப்பு வேண்டும்." -வதூத்[6]

மேற்கோள்கள் தொகு

  1. Nirbachito probondho ,Kollol prokashoni ISBN 984 617 009 2
  2. Discussion on Kazi Abdul Odud held on Department of Bengali, Govt. Rajendra college Faridpur . Date : 10-3-2013
  3. Kazi Abdul Wadud : Somaj cheytona ,Dr. Sahin Afjal .First publish : Ekushey Boimela 2005
  4. Kazi Abdul Oduder songkhipto Jibonponji ,porishistho ,Nirbachito probondho Edition : Mossamot Selina khatun .,Lecturer ,Bengali ,Eden Govt. Mohila college
  5. Discussion on Kazi Abdul Odud held on Department of Bengali, Govt. Rajendra college Faridpur . Date : 10-3-2013
  6. Nirbachito probondho ,Kollol prokashoni ISBN 984 617 009 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_அப்துல்_வதூத்&oldid=3668203" இலிருந்து மீள்விக்கப்பட்டது