காசி எம் பதுருத்தோசா
காசி எம் பதுருத்தோசா (Kazi M Badruddoza) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியாவார். 1927 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். வங்காளதேச தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார்.[1]
காசி எம் பதுருத்தோசா Kazi M Badruddoza | |
---|---|
இயற்பெயர் | কাজী এম বদরুদ্দোজা |
பிறப்பு | 1 சனவரி 1927 போக்ரா மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
கல்வி | முனைவர். |
கல்வி கற்ற இடங்கள் | தாக்கா பல்கலைக்கழகம் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகம் |
கல்வி மற்றும் தொழில்
தொகு1952 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக்கழகத்தில் தனது வேளாண்மை பாட இளநிலை பட்டம் பெற்றார். அமெரிக்காவின் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]
பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த பதுருத்தோசா பாக்கித்தான் விவசாய ஆராய்ச்சி மன்றத்தின் பொது இயக்குநராகவும் இருந்தார். வியட்நாமின் அனோய் நகரில் (1985-88) முதன்மை ஆராய்ச்சி ஆலோசகராகவும் இருந்தார்.[1] வங்காளதேச வேளாண்மை அகாதமியின் தலைவர் (2012-13) பொறுப்பிலும் பதுருத்தோசா இருந்துள்ளார். காசிபயரா என்று அழைக்கப்படும் கொய்யா வகையை பதுருத்தோசா கண்டுபிடித்தார். 1974-1988 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் வங்காளதேச வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தார்.[1]
விருதுகள்
தொகு•சுதந்திர தின விருது (2012) [2]
•காசிபோலெட்டசு என்ற பூஞ்சை இனமானது இவரது பெயரால் அழைக்கப்படுகிறது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Dr. Kazi M. Badruddoza". Bangladesh Academy of Sciences. Archived from the original on 30 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 March 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Independence Award 2012 goes to 10". The Daily Star. BSS. 12 March 2012. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=225952. பார்த்த நாள்: 6 February 2013.
- ↑ "Kaziboletus, a new boletoid genus of Boletaceae associated with Shorea robusta in Bangladesh". Mycological Progress 20: 1145–1156. 2021. doi:10.1007/s11557-021-01723-7.