காசி விசாலாட்சி கோயில்

காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple or Vishalakshi Gauri Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்த வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது.

காசி விசாலாட்சி கோயில்
காசி விசாலாட்சி கோயில் is located in Uttar Pradesh
காசி விசாலாட்சி கோயில்
காசி விசாலாட்சி கோயில்
உத்தரப் பிரதேச வாரணாசியில் விசாலாட்சி கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:25°18′32″N 83°0′39″E / 25.30889°N 83.01083°E / 25.30889; 83.01083ஆள்கூறுகள்: 25°18′32″N 83°0′39″E / 25.30889°N 83.01083°E / 25.30889; 83.01083
பெயர்
வேறு பெயர்(கள்):வாரணாசியில் உள்ள சக்தி பீடம்
பெயர்:விசாலாட்சி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:வாரணாசி
அமைவு:மிர் படித்துறை, வாரணாசி
கோயில் தகவல்கள்
மூலவர்:விசாலாட்சி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1893
அமைத்தவர்:நாட்டுக்கோட்டை நகரத்தார்

சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாக கருதப்படுகிறது.

முற்காலத்தில் அன்னபூரணியும் விசாலாட்சி தேவியர்கள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்ததது. பின்னர் இரு தேவியர்களுக்கும் தனித் தனித் கோயில்கள் அமைக்கப்பட்டதால், இருதேவியர்களும் வேறுபட்டு காட்சியளிக்கின்றனர்.[3]

பெயர்க் காரணம்தொகு

விசாலாட்சி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள். காசி விசாலாட்சியின் பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

 
Kashi Vishalakshi Temple

நகரத்தார் திருப்பணிதொகு

 
காசி விசாலாட்சி கோயிலில் 1908இல் செய்யப்பட்ட குடமுழுக்கு விபரம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கி.பி1893இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது.[4] இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள்(கி.பி1908இல்) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது[4]. இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது.[4]

திருவிழாக்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

  1. சக்தி பீடங்கள்
  2. ஆதி சக்தி பீடங்கள்

அடிக்குறிப்புகள்தொகு

  1. Eck 1982, பக். 229.
  2. Varanasi Temples
  3. P. Arundhati (1 January 2001). Annapurna: A Bunch of Flowers of Indian Culture. Concept Publishing Company. பக். 17–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-897-4. https://books.google.com/books?id=cfK2LoH_j54C&pg=PA18. பார்த்த நாள்: 19 November 2012. 
  4. 4.0 4.1 4.2 சோமலெ (1963). ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர வரலாறு. பக். 40. 

மேற்கோள்கள்தொகு