அன்னபூரணி தேவி கோவில்
அன்னபூரணி தேவி கோயில் (இந்தி: अन्नपूर्णा देवी मंदिर), வட இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் உள்ளது. இந்து மதத்தில் இந்த கோவிலுக்கு மிகுந்த சிறப்பு உள்ளது. [சான்று தேவை] இந்த கோவில் பெண்தெய்வம் அன்னபூரணிதேவிக்காகக் கட்டப்பட்டது. அன்னபூரணி ஓர் இந்து மதக் கடவுள். பார்வதி தேவியின் ஒரு வடிவமாகவும் இவரை கருதுவர். 1729 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா பாஜிராவால் கட்டப்பட்ட கோவில் இது.[2][3][4][5]
அன்னபூரணி தேவி கோவில் | |
---|---|
அன்னபூரணிதேவி சிவபெருமானுக்கு அன்னம் படைக்கும் காட்சி | |
பெயர் | |
தமிழ்: | அன்னபூர்ணா தேவி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | வாரணாசி |
அமைவு: | காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி |
ஏற்றம்: | 80.985[1] m (266 அடி) |
ஆள்கூறுகள்: | 25°19′04″N 82°58′26″E / 25.317645°N 82.973914°E |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | அன்னகூடம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | நாகரா கட்டிடக் கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 1 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 2 (main) |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1729 |
அமைத்தவர்: | பாஜிராவ் |
கட்டுமானம்
தொகுஅன்னபூரணி தேவி மந்திர் நகாரா கால கட்டிடக்கலைக்கு சான்றாகும். பெரிய தூண்களைக் கொண்ட தாழ்வாரத்தில் தேவியின் படத்தை வைத்திருக்கின்றனர். இங்கு இரண்டு அன்னபூரணி சிலைகள் இருக்கின்றன. ஒன்று தங்கத்தினால் செய்யப்பட்டது. மற்றொன்று பித்தளையால் செய்யப்பட்டது. பித்தளையால் செய்யப்பட்ட சிலை தினமும் தரிசனம் கிடைக்கும். தங்கச் சிலை தரிசனம் வருடத்திற்கு ஒருமுறை தீபாவளிக்கு முந்தின நாள் கிடைக்கும்.
மத நம்பிக்கை
தொகுஇந்து புராணத்தின்படி அன்னபூரணி துர்கா தேவியின் எட்டாவது வடிவம். வெள்ளை ஆடை அணிந்து அழகாக வீற்றிருப்பார்.
இடம்
தொகுஇது வாரணாசி இரெயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Elevation". Elevation finder. http://www.freemaptools.com/elevation-finder.htm. பார்த்த நாள்: Jun 2015.
- ↑ "Annapurna Devi Mandir". Varanasi.org. http://www.varanasi.org.in/annapurna-temple-varanasi.
- ↑ "Bhavani Devi". Varanasi Temples. http://varanasi-temples.com/category/devi-temples/annapurna-devi/.
- ↑ "Annapurna Temple in Varanasi". Temple Travel இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150406041844/http://www.templetravel.net/2013/04/annapurna-temple-in-varanasi-uttar.html.
- ↑ "Maa Annapurneshwari Stotram". Bhakti Song. https://www.youtube.com/watch?v=6NaYhGJ7-gY.