காசுமீரி லால் சாகிர்
காசுமீரி லால் சாகிர் (Kashmiri Lal Zakir) கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர் என்ற பன்முகங்கள் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த ஓர் உருது இலக்கியவாதியாவார்.[1] 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி சாகிர் பிறந்தார்.
காசுமீரி லால் சாகிர் Kashmiri Lal Zakir | |
---|---|
பிறப்பு | இந்தியா | 7 ஏப்ரல் 1919
இறப்பு | 31 ஆகத்து 2016 | (அகவை 97)
பணி | எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1940s–2016 |
அறியப்படுவது | கசல் (இசை) |
விருதுகள் | பத்மசிறீ பாகிர்-இ-அரியானா |
வலைத்தளம் | |
Official blog |
1940 ஆம் ஆண்டுகளில் லாகூரிலிருந்து வெளியான அதாபி துனியா என்ற பத்திரிகையில் சாகிரின் முதலாவது கசல் கவிதை வெளியிடப்பட்டது. அன்று முதல் இவருடைய இலக்கியப் பயணம் நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் மற்றும் பயணக் குறிப்புகள் என விரிந்தது.[2]
சாகிர் அப்போதைய பிரிட்டிசு இந்தியாவில் பஞ்சாப் கல்வித் துறையில் பணியாற்றினார். அரியானா உருது அகாடமியுடன் அதன் தலைவராக பல ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தார்.[3] இந்தி மற்றும் உருது மொழிகளில் எழுதும் வல்லமை கொண்டிருந்ததால் பல படைப்புகளை உருவாக்கினார்.[4][5] டின் சிகர் ஏக் சாவல், கசல் தொகுப்பு,[6] ஆப் முச்சே சோன் டூ என்ற நாவல்,[7] ஏய் மாவோ பெகனோ பெட்டியோ போன்றவை சில முக்கிய நூல்களாகும்.[8]
அரியானா அரசு வழங்குகின்ற பாகிர்-இ-அரியானா என்ற விருது சாகிருக்கு வழங்கப்பட்டுள்ளது.[1] இந்திய இலக்கியத்திற்கு சாகிர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[9]
காசுமீரி லால் சாகிர் 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 அன்று தன்னுடைய 97 ஆவது வயதில் காலமானார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Biography of Kashmiri Lal Zakir". Urdu Youth Forum. 2015. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "K. L. Zakir: The pride of Urdu". Spectrum. 28 June 2009. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
- ↑ "Academy hosts nonagenarian Kashmiri Lal Zakir". Daily Excelsior. 17 April 2013. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
- ↑ "WorldCat profile". WorldCat. 2015. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
- ↑ "Hindi Book Centre profile". Hindi Book Centre. 2015. பார்க்கப்பட்ட நாள் 13 December 2015.
- ↑ Kashmiri Lal Zakir (1981). Tin cihre ek saval. Maudarn Pablishing Haus. p. 40. அமேசான் தர அடையாள எண் B0000E7D2L.
- ↑ Kashmiri Lal Zakir (2008). Ab Mujhey Sone Do. Hindi Book Centre. p. 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181871534.
- ↑ Aey Mao Behno Betiyo. Hindi Book Centre. 2010. p. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182236127.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ KL Zakir, doyen of Urdu literature, dead at 97