காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்

காஜா முகையதீன் சிஷ்தி (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய சூபியம் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.[4] இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.

காஜா முகையதீன் சிஷ்தி
Dargah of moinuddin chishti.jpg
காஜா முகையதீன் சிஷ்தி அடக்கத்தலம்,அஜ்மீர் தர்கா
பிறப்பு536 இ.நா. /கி.பி. 1142 [1]
சிஸ்தன்[2]
இறப்புரஜப் மாதம் 6 ம் தேதி633 இ.நா.
˜ மார்ச் 15, கி.பி. 1236
அஜ்மீர் தர்கா அஜ்மீர், ராஜஸ்தான், இந்தியா
மற்ற பெயர்கள்Gharib Nawaz
பணிஇஸ்லாமிய அறிஞர்,தத்துவஞானி,சூபி ஞானி
காலம்12 ஆம் நூற்றாண்டு
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்

அஜ்மீர் தர்காதொகு

 
அஜ்மீர் தர்கா

காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் அஜ்மீர் தர்கா என்றழைக்கப் படுகிறது.[5] இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கலாச்சார அஞ்சலிதொகு

காஜா முகையதீன் சிஷ்திக்கு அஞ்சலி செலுத்த 2008 ம் ஆண்டு வெளியான ஜோதா அக்பர் திரைபடத்தில் "காஜா மேரே காஜா" என்ற பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் இயற்றப்பட்டது. [6][7]

மேற்கோள்கள்தொகு

  1. "Birth Date". 2016-06-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Birth Place".
  3. Sadarangani, Neeti M. (2004). Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact. New Delhi: Sarup & Sons. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7625-436-3. 
  4. History of Aurangzeb: Based on Original Sources By Jadunath Sarkar Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain
  5. "797th Urs of Khawaja Moinuddin Chisty begins in Ajmer". Sify. http://www.sify.com/news/797th-urs-of-khawaja-moinuddin-chisty-begins-in-ajmer-news-national-jguwargfefi.html. பார்த்த நாள்: 18 February 2012. 
  6. "Jodhaa Akbar Music Review". Planet Bollywood. 25 May 2015 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  7. "Khwaja Mere Khwaja". Lyrics Translate. 25 May 2015 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)