அஜ்மீர் தர்கா
அஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் (மக்பரா) ஆகும்.[1] இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் ஊரில் அமைந்துள்ளதால் இது அஜ்மீர் தர்கா என அழைக்கப்படுகிறது. அஜ்மீர் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.[2]
தர்கா
தொகுதர்காவின் பிரதான வாயில் நிஜாம் வாயில் ஆகும். இது முகலாயப் பேரரசர் ஷாஜகான் கட்டிய ஷாஜகானின் வாயிலை தொடர்ந்து உள்ளது. இதையொட்டி சுல்தான் முகமது கில்ஜி உருவாக்கிய புலந்தர்வாசா எனும் பெரிய வாயில் உள்ளது. அவர் புலந்தர்வாசா எனும் பெரிய வாயிலின் மீது நினைவு சடங்குகள் தொடக்கத்தைக் குறிக்கும் விதமாக, உருஸ் கொடியை ஏற்றினர்.[3]
உருஸ் சந்தனக்கூடு விழா
தொகுஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் ஏழாவது மாதமான ரஜப் மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் இங்கு உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.[4]
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவம்
தொகுஅஜ்மீர் தர்காவில் 2007ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தேறியது. ரம்ஜான் நோன்பு திறக்கும் நேரத்தில் மக்கள் கூடியிருந்த வேளையில் நடைபெற்ற பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.[5][6]
விசாரணை
தொகுஇந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தொடங்கிய போலீசார் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணையை ஒப்படைத்தது. அதன் பின்னர், வழக்கு தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.[7]
தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் 149 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது. மேலும் அரசு தரப்பில் 451 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இறுதியில் சிறப்பு நீதிபதி தினேஷ் குப்தா 500 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கினார்.[5][6][7]
குற்றவாளிகள்
தொகுஇந்த வழக்கில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற இந்து அமைப்பில் முன்பிருந்த பவேஷ் பட்டேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து 22 மார்ச்சு 2017 அன்று தீர்ப்பளித்தது.[5][6][7][8]
தலை துண்டிக்க அழைப்பு
தொகு2022-ம் ஆண்டு ஜூலை தர்காவின் மதகுருக்களில் ஒருவரான சல்மான் சிஷ்டி, முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபூர் ஷர்மாவின் தலையை துண்டிக்க அழைப்பு விடுத்தார். இதற்காக ஜூலை 5 அன்று அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[9]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "797th Urs of Khawaja Moinuddin Chisty begins in Ajmer". Sify. http://www.sify.com/news/797th-urs-of-khawaja-moinuddin-chisty-begins-in-ajmer-news-national-jguwargfefi.html. பார்த்த நாள்: 18 February 2012.
- ↑ Barack Obama offers 'chadar' at Ajmer Dargah Sharif for Chishty's 803rd Urs
- ↑ "Historical Monuments". Mission Sarkar Gharib Nawaz. Archived from the original on 29 January 2015.
- ↑ "Preparations for Urs in full swing at Ajmer dargah". The Times of India. 13 May 2011 இம் மூலத்தில் இருந்து 26 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140526195240/http://timesofindia.indiatimes.com/city/jaipur/Preparations-for-Urs-in-full-swing-at-Ajmer-dargah/articleshow/8279648.cms?referral=PM. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-26. பார்க்கப்பட்ட நாள் 2016-04-22.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 5.0 5.1 5.2 What is the Ajmer Dargah blast case? The Indian Express, March 22, 2017
- ↑ 6.0 6.1 6.2 Ajmer Blast Case: NIA Court Awards Life Imprisonment to Devendra Gupta, Bhavesh Patel News 18, March 22, 2017
- ↑ 7.0 7.1 7.2 அஜ்மீர் குண்டு வெடிப்பு.. 2 ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தமிழ் ஒன் இந்தியா, மார்ச் 22, 2017
- ↑ Bhavesh Patel and Devendra Gupta owed their allegiance to RSS in the past.The Hindu, March 22, 2017
- ↑ "Ajmer Dargah Cleric Arrested for Offering Bounty on Nupur Sharma". The Quint (Ajmer: The Quint). 7 July 2022. https://www.thequint.com/news/india/ajmer-dargah-cleric-arrested-for-offering-bounty-on-nupur-sharma.