காஞ்சனமாலா

தெலுங்கு நடிகை

காஞ்சனமாலா (Kanchanamala)(1917-1981) தெலுங்குத் திரைப்படத்துறையில் தனது பணிகளுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார்.[1][2]

காஞ்சனமாலா
காஞ்சனமாலா இல்லலு திரைப்படத்தில் (1940)
பிறப்பு5 மார்ச்சு 1917
தெனாலி, மதராஸ் மாகாணம், பிரித்தானியா இந்தியா
இறப்பு24 சனவரி 1981 (வயது 63)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
காலி வெங்கையா

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

காஞ்சனமாலா ஆந்திர மாநிலம் தெனாலியில் 1917ஆம் ஆண்டு மார்ச்சு 5ஆம் நாள் பிறந்தவர். இவர் தனது குழந்தைப் பருவத்தில், வயலின் ஆசிரியராக இருந்த தன் மாமாவுடன் வாழ்ந்தார். கலி வெங்கையா என்பவரை மணந்தார். கலி வெங்கையா பின்னர் காச நோய் பாதிப்பால் இறந்தார்.

தொழில் தொகு

 
இல்லலுவில் காஞ்சனமாலா மற்றும் உமாமகேஸ்வர ராவ் (1940)

1935ஆம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ண துலாபாரத்தில் மித்ரவிந்தா என்ற சிறிய பாத்திரத்தில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தெலுங்கு திரைத்துறையின் முதல் பாடலாசிரியர் சந்தால கேசவ தாசுவின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. இரேலங்கி இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

காஞ்சனமாலா தனது அழகால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். வீரபிமன்யு, க்ருஹலட்சுமி மற்றும் மாலாபில்லா போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

வேல் பிக்சர்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பாளராக இருந்த இராமபிரம்மம் என்பவர் காஞ்சனமாலாவை நடிப்பதற்கு ஏற்றவர் அல்ல என்று நிராகரித்தார். பின்னர், காஞ்சனமாலா சிறந்த நடிகையாகத் தனது வாழ்க்கையில் உயர்ந்தபோது, தான் செய்த தவற்றினை உணர்ந்து, குடிப்பாட்டி வெங்கடாசலமின் வெளியிடப்படாத நாவலை அடிப்படையாகக் கொண்ட மலப்பிலா எனும் திரைப்படத்தில் அரிஜன் கிராமத்துப் பெண் சம்பலாதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். இத்தகைய சிக்கலான கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமற்றவர் என்று சந்தேகம் கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் காஞ்சனமாலா முதல் பாதியில் படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட கிராமத்துப் பெண்மணியாகவும், பிற்பகுதியில் கல்வியறிவு பெற்ற நவீன நகரப் பெண்ணாகவும் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

பம்பாயில் சாகர் மூவிடோன் தயாரித்த வீரபிமன்யு (1936) அவரது அடுத்த படமாக இருந்தது. இந்த படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார் கொடவடிகண்டி குடும்ப ராவ். இவரது அழகால் ஈர்க்கப்பட்டு, நடிகரும் தயாரிப்பாளரும், இந்தி திரைத்துறையின் மிக நேர்த்தியான நடிகையுமான நர்கிசின் தாயார் ஜடன் பாய், இவரை இந்தி படங்களில் நடிக்கச் சொன்னார். மெஹபூப் கான் மற்றும் அந்தக் காலத்துப் பிரபல கதாநாயகன் மோதிலால் ஆகியோரும் இவரை இந்தி கற்கச் சொன்னார்கள். இதனால் அவர்கள் காஞ்சனாவை இந்தி திரைத்துறையில் பெரிய நட்சத்திரமாக மாற்ற முடியும் என்று நம்பினர். ஆனால் பதின்மவயதில் இருந்த காஞ்சனமாலா அவர்களின் சலுகைகளை நிராகரித்தார். காஞ்சனமாலா நடித்த மூன்றாவது படமான விப்ர நாராயணா இவருக்கு நட்சத்திரத் தகுதியினைப் பெற்றுத் தந்தது.

வந்தேமாதரத்தில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மதுராநகரிலோ சல்லனம்மா போது நாகையாவும் காஞ்சனமாலாவும் பாடிய காதல் பாடல் பயன்படுத்தப்பட்டது. ஜெமினி மூவிஸ் தயாரிப்பில், பாலா நாகம்மா படத்தில் நாகம்மாவாக நடிக்க காஞ்சனமாலா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதில் ஜெமினி படங்களின் கீழ் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் இருந்தது. படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசனுடன் அவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சட்டச் சிக்கலுக்கு வழிவகுத்தது. ஜெமினி படங்களைத் தவிர வெளி படங்களில் நடிக்க முடியாமல் போனது. மேலும் கணவனை இழந்தது விரக்தியை ஏற்படுத்தியது மற்றும் மன சமநிலையின்மைக்கு வழிவகுத்தது.

பின்னர் காஞ்சனா தனது சொந்த ஊரான தெனாலியில் உள்ள தனது சகோதரியின் இடத்திற்குக் குடிபெயர்ந்தார்.

கலாச்சார தாக்கம் தொகு

காஞ்சனமாலா முதலில் பாடிய "தினா தினமு பாபத்னி டீவிஞ்சி போண்டி தேவலோகமுலோனி தேவதல்லாரா" என்ற இந்த தாலாட்டை முணுமுணுத்து அன்றைய தாய்மார்கள் தங்கள் குழந்தையைத் தூங்க வைப்பார்கள்.

மலப்பில்லா படத்தின் விளம்பர நாட்காட்டியிலிருந்த காஞ்சனமாலாவின் புகைப்படம் பல வீடுகளை அலங்கரித்தது. காஞ்சனமாலா திரைத்துறைப் புரவலர்களிடையே மிகுதியான ஈடுபாட்டினை உருவாக்கினார்.

திரைப்படவியல் தொகு

  • ஸ்ரீகிருஷ்ண துலாபாரம் (1935) மித்ரவிந்தராக
  • வீரபிமன்யு (1936) உத்தராவாக
  • விப்ரநாராயணா (1937) தேவதேவியாக
  • குருஹலட்சுமி (1938) மாதுரியாக
  • மாலாபில்லா (1938) சம்பலாதாவாக
  • சானகியாக வந்தே மாதரம் (1939)
  • மல்லி பெல்லி (1939) இலலிதாவாக
  • இல்லலு (1940)
  • மகிராவணா (1940) சந்திரசேனாவாக
  • பாலா நாகம்மா (1942) பாலநாகம்மாவாக
  • நர்த்தனசாலா (1963) கவுரவ வேடத்தில்

மேற்கோள்கள் தொகு

கலகனே மீதமுள்ள கலலராணி சினிமா பயணம்

வெளி இணைப்புகள் தொகு

  • Kanchanamala at IMDb
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சனமாலா&oldid=3656021" இலிருந்து மீள்விக்கப்பட்டது