காட்டுக்கோழி
காட்டுக் கோழி Junglefowl புதைப்படிவ காலம்: Late Miocene-Holocene | |
---|---|
பச்சைக் காட்டுக் கோழி, (Gallus varius) சேவல் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Gallus Brisson, 1760
|
இனங்கள் | |
|
காட்டுக் கோழி (Junglefowl) என்பது காடுகளில் வாழும் கோழி இனப் பறவையாகும். இவை இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெரிய பறவைகளாகவும், வண்ணமயமான இறகுகளைக் கொண்டும் இருக்கும்.
பல பறவைகள்போல இவற்றில் ஆண்பறவைகளான சேவல்கள் முட்டைகளை அடைக்காப்பதில் பங்குவகிப்பதில்லை. பெண் பறவைகளான கோழிகளே இந்தப் பணிகளை செய்கின்றன இந்தக் கோழிகள் உருமறைப்பை செய்யக்கூடியன.
காட்டுக் கோழிகளின் உணவு விதைகள் என்றாலும் இவை பூச்சிகளையும் உண்ணக்கூடியன. குறிப்பாக இதன் குஞ்சுகளுக்கு உணவாகத் தரும்.
காட்டுக் கோழிகளில் ஒரு இனமான சிவப்புக் காட்டுக்கோழி தற்போதைய வீட்டுக் கோழிகளுக்கு மூதாதை என்று கருதப்படுகிறது. என்றாலும் வீட்டுக் கோழிகளின் மூதாதையாக சிலர் வெள்ளைக் கானாங்கோழிதான் எனக் கருதுவோரும் உள்ளனர்..[1]
இலங்கைக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப்பறவையாக உள்ளது.
வாழும் சிற்றினங்கள்
தொகுதற்பொழுது கல்லசு பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை:[2]
ஆண் | பெண் | விலங்கியல் பெயர் | பொதுப்பெயர் | பரவல் |
---|---|---|---|---|
கல்லசு கல்லசு | சிவப்புக் காட்டுக்கோழி | இந்தியா, பாக்கித்தான், கிழக்கு நோக்கி இந்தோசீனா மற்றும் தெற்கு சீனா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பீன்சு மற்றும் இந்தோனேசியா | ||
கல்லசு இலபாயெட்டீ | இலங்கை காட்டுக்கோழி | இலங்கை | ||
கல்லசு சோனேரட்டீ | வெள்ளைக் கானாங்கோழி | இந்திய தீபகற்பம், ஆனால் குஜராத், மத்தியப் பிரதேசம், தெற்கு ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தானி பஞ்சாப் வரை பரவியுள்ளது | ||
கல்லசு வேரியசு | பச்சைக் காட்டுக்கோழி | சாவகம், பாலி, உலோம்போ, கொமோடோ, புளோரெஸ், ரின்கா மற்றும் சிறிய தீவுகள் சாவகம் புளோரெஸ், இந்தோனேசியாவுடன் இணைக்கின்றன |
- கல்லசு பேரினம் யூரேசியா முழுக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையில் இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உருவானது என்று தோன்றுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Eriksson J, Larson G, Gunnarsson U, Bed'hom B, Tixier-Boichard M, et al. (2008) Identification of the Yellow Skin Gene Reveals a Hybrid Origin of the Domestic Chicken.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Pheasants, partridges & francolins". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
- Steve Madge; Philip J. K. McGowan; Guy M. Kirwan (2002). Pheasants, Partidges and Grouse: A Guide to the Pheasants, Partridges, Quails, Grouse, Guineafowl, Buttonquails and Sandgrouse of the World. A&C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-3966-7.