காட்டுப்பள்ளி துறைமுகம்

காட்டுப்பள்ளி துறைமுகம், தமிழக சிறு துறைமுகங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி வருவாய் வட்டத்தில் அமைந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பள்ளி ஊராட்சி பகுதியில் வங்காள விரிகுடா கடற்கரையில் 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 15 மீட்டர் கடல் ஆழம் கொண்ட இத்துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் சனவரி 2013 முதல் இயக்குகிறது.[1]

அமைவிடம்

தொகு

காட்டுப்பள்ளி துறைமுகம் சென்னைக்கு வடக்கே 29 கிலோ மீட்டர் தொலைவிலும்; பழவேற்காடு துறைமுகத்திற்கு தெற்கே 18.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

துறைமுகத்தின் பணிகள்

தொகு
  • வணிக சரக்குகளை கையாளுவதற்கான சரக்கு பெட்டக தோணித்துறைகள் இரண்டு கொண்டுள்ளது.
  • கப்பல் கட்டுதல், கப்பல் பழுது பார்க்கும் மற்றும் பாகங்கள் இணைக்கும் தொழிற்சாலைகள் கொண்டது.
  • நடுக்கடலில் அமைக்கப்படும் தள மேடைகளை உருவாக்குதல்.
  • பொது சரக்குகள் மற்றும் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுகிறது.

விரிவாக்கம்

தொகு

தற்போது 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள காட்டுப்பள்ளி சிறு துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு அதானி குழுமம் 6,110 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசிடம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. காட்டுப்பள்ளி துறைமுகம்
  2. [https://www.bbc.com/tamil/articles/cgrp1kxjng1o காட்டுப்பள்ளி துறைமுகம்: 6,100 ஏக்கர் நிலம் கேட்கும் அதானி