காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு

காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு (Cadmium(I) tetrachloroaluminate) என்பது Cd2(AlCl4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காட்மியம் +1 ஆக்சினேற்ற நிலையில் இருக்கும் முதல் சேர்மம் காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு என்று 1961 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது[2]. அடுத்தடுத்த அதிர்வு அலைமாலை ஆய்வுகள் இச்சேர்மத்தில் காட்மியம் - காட்மியம் பிணைப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன[3].. தனியான படிகத்தில் இரண்டு தனித்தனியான எக்சு கதிர் விளிம்புவளைவு ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன[4][5]. எனவே இச்சேர்மம் பாதரசம்(I) சேர்மங்களுடன் ஒப்பிடப்படுகிறது. அதாவது பாதரச(I) குளோரைடில் பாதரசம் Hg22+ ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.

காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைகாட்மியம்(2+) பிசு( டெட்ராகுளோரோஅலுமினேட்டு(1−))
இனங்காட்டிகள்
79110-87-5 Y
பண்புகள்
Cd2[AlCl4]2
வாய்ப்பாட்டு எடை 562.4123 கி/மோல்
தோற்றம் வென்நிற படிகன்கள்
உருகுநிலை 227 ° (சிதைவு)
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1027] TWA 0.005 மி.கி/மி3 (காட்மியமாக)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[1]
உடனடி அபாயம்
Ca [9 மி.கி/மீ3 (காட்மியமாக)][1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் பண்புகள்

தொகு

காட்மியம் உலோகத்தை உருகிய காட்மியம் குளோரைடில் (CdCl2) வில் கரைத்து பின்னர் அலுமினியம் குளோரைடு (AlCl3) சேர்த்து காட்மியம்(I) நாற்குளோரோ அலுமினேட்டு தயாரிக்கப்படுகிறது.

CdCl2 + Cd → Cd2Cl2
Cd2Cl2 + 2 AlCl3 → Cd2(AlCl4)2

Cd2(AlCl4)2 ஒரு எதிர்காந்தப் பண்பு கொண்ட சேர்மமாகும். இணையில்லாத எலக்ட்ரான்கள் எதுவும் இச்சேர்மத்தில் இல்லை. தண்ணீரில் உடனடியாக வினைபுரிந்து Cd மற்றும Cd2+ என விகிதச்சமமாதலின்றி பிரிகையடைகிறது.

இச்சேர்மத்தினுடைய மெய்புனை கட்டமைப்பில் ஈத்தேனைப் போன்ற Cd2Cl6 அலகுகள் AlCl4 அலகுகளுடன் உச்சியைப் பகிர்ந்து கொள்கின்றன. இவ்வமைப்பிலுள்ள Cd–Cd பிணைப்பின் பிணைப்பு நீளம் 257.6 பைகோமீட்டர் அல்லது 256.1 பைகோமீட்டர் ஆகும்.[4] or 256.1pm.[5]

 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0087". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Corbett, J. D.; Burkhard, W. J.; Druding, L. F. (January 1961). "Stabilization of the Cadmium(I) Oxidation State. The System Cd-Cd1
    2
    (AlCl
    4
    )
    2
    –Cd2
    (AlCl
    4
    )
    2
    ". Journal of the American Chemical Society 83 (1): 76–80. doi:10.1021/ja01462a016.
     
  3. Corbett, J. D. (Aug 1962). "The Cadmium(I) Ion Cd2+
    2
    . Raman Spectrum and Relationship to Hg2+
    2
    ". Inorganic Chemistry 1 (3): 700–703. doi:10.1021/ic50003a051.
     
  4. 4.0 4.1 Faggiani, R.; Ronald J. Gillespie; John E. Vekris (1986). "The cadmium(I) ion, Cd2+
    2
    ; X-ray crystal structure of Cd
    2
    (AlCl
    4
    )
    2
    ". Journal of the Chemical Society Chemical Communications 1986 (7): 517–518. doi:10.1039/C39860000517.
     
  5. 5.0 5.1 Staffel, T.; Dr. Gerd Meyer (1987). "Synthesis and crystal structures of Cd[AlCl
    4
    ]
    2
    and Cd
    2
    [AlCl
    4
    ]
    2
    ". Zeitschrift für anorganische und allgemeine Chemie 548 (5): 45–54. doi:10.1002/zaac.19875480505.