காதம்பரி முரளி

ஓர் பெண் எழுத்தாளரும், விளையாட்டுத்துறைப் பத்திரிகையாளருமாவார்
(காதம்பரி முரளி வேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காதம்பரி முரளி (Kadambari Murali Wade; பிறப்பு: ஆகத்து 9, 1975) ஓர் பெண் எழுத்தாளரும், விளையாட்டுத்துறைப் பத்திரிகையாளருமாவார். இந்துஸ்தான் டைம்சு பத்திரிகையின் முன்னாள் விளையாட்டுத்துறை முதன்மை ஆசிரியராக பணியாற்றி உள்ளார். சனவரி 2010 இதழில் தொடங்கிய மாத இதழான "ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்"டின் மறுசீரமைப்பைத் தொடங்குவதற்காக, நவம்பர் 2010இல் சேர்ந்தார். இவரது கட்டுரைகள் பெரும்பாலும் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துகின்றன.

காதம்பரி முரளி வேது
பிறப்பு9 ஆகத்து 1975 (1975-08-09) (அகவை 49)
மும்பை, இந்தியா
பணிபத்திரிகை ஆசிரியர், விளையாட்டுப் பத்திரிகையாளர்
பட்டம்ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட், இந்தியா என்ற இதழில் முன்னாள் முதன்மை ஆசிரியர்.
வாழ்க்கைத்
துணை
வைலி வேது

இவர், ஒரு செய்தி நிறுவனத்தின் முக்கிய இளைய தேசிய ஆசிரியராவாவார். 2006ஆம் ஆண்டில் 'இந்தியத் துடுப்பாட்ட எழுத்தாளர் விருது'க்கான விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் முதல் வெற்றியாளரும் ஆவார்.[1] ஆகஸ்ட் 2007 இல்[2] துட்டுப்பாட்டத்தின் புதிய துடுப்பாட்ட முறையாக உருவான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) என அறியப்படும்[3] இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) திட்டங்களை இவர் வெளிக் கொணர்ந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "DNA's Ramesh Nair named Best Photographer". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 10 August 2006.
  2. "Indian Sports Journalism Awards" (PDF). Sports Journalists' Federation of India. Archived from the original (PDF) on 11 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.
  3. Murali, Kadambari. "BCCI set to steal ICL's thunder with secret plan". Hindustan Times. Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதம்பரி_முரளி&oldid=3863404" இலிருந்து மீள்விக்கப்பட்டது