காந்தி நிகேதன் ஆசிரமம்

காந்தி நிகேதன் ஆசிரமம், 1940ல் காந்திய சிந்தனைகளை பரப்புவதற்கு, என். எம். ஆர். சுப்பராமன் மற்றும் அ. வைத்தியநாத ஐயர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படி, கோ. வேங்கடாசலபதி[1] என்பவரால், மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தே. கல்லுப்பட்டி பேரூராட்சியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. 1956ல் காந்தியவாதி ஜே. சி. குமரப்பா, காந்தி நிகேதன் ஆசிரமத்தை பதிவு செய்யப்பட்ட சங்கமாக நிறுவினர்.

நோக்கங்கள்

தொகு

கிராமியப் பொருளாதரம், சுதேசி இயக்கம், கிராம தன்னாட்சி, சர்வோதயம், மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, அடிப்படைக் கல்வி வழங்குதல், தொழிற்கல்வி பயிற்றுவித்தல் போன்ற காந்தியச் சிந்தனைகளை கிராம மக்களிடையே பரப்புவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

அலகுகள்

தொகு

காந்தி நிகேதன் ஆசிரமத்தின் கீழ் கல்வி நிலையங்கள், வேளாண்மைப் பயிற்சி மற்றும் கிராமத் தொழில்கள் பயிற்சி என மூன்று பிரிவுகளில் கிளை நிறுவனங்கள் செயல்படுகிறது.

அரசு நிதியுதவி கல்வி நிலையங்கள்

தொகு

காந்தி நிகேதன் ஆசிரமம், அரசு நிதியுதவியுடன் இரு பாலர் பயிலும் இரண்டு கல்வி நிலையங்களை நடத்துகிறது.

  • காந்தி நிகேதன் கோ. வெங்கடாசலபதி மேனிலைப் பள்ளி
  • காந்தி நிகேதன் கோ. வெங்கடாசலபதி ஆரம்பப் பள்ளி

ஜெ. சி. குமரப்பா கிராமியத் தொழில் வளர்ச்சி நிறுவனம்

தொகு

கிராமப்புற இளைஞர்களுக்கு கதர் துணிகள் மற்றும் ஆடைகள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பு, இரும்பு மற்றும் மர தளவாடப் பொருட்கள், தையல், எம்பிராய்டரி, மின் மற்றும் மின்னனு சாதனங்கள் பழுது நீக்குதல், ஊதுபத்தி, சோப்பு மற்றும் சுகாதாரப் பொருட்களை உற்பத்தி செய்ய குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்குகிறது.[2]

வேளாண் பயிற்சி நிலையம்

தொகு

25 ஏக்கர் விளைநிலத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு மேம்பட்ட வேளாண்மைப் பயிற்சி வழங்குகிறது.

ஜே. சி. குமரப்பா நினைவுச் சின்னங்கள்

தொகு

இந்த ஆசிரம வளாகத்தில் ஜே. சி. குமரப்பாவின் இறுதி சாம்பல் அடங்கிய கல்லறையும், அவர் பயன்படுத்திய குடில் ஒன்றும் உள்ளது. குடிலில் அவர் பயன்படுத்திய மரத்தாலான எழுது மேசை, தகரத்தாலான கழிப்பறை கூண்டு போன்றவை உள்ளன.[3]

 
தே. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் உள்ள ஜே சி குமரப்பாவின் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டுள்ள நினைவிடம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. GV, a pioneer in rural reconstruction
  2. காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தொழில் பயிற்சிகள்
  3. சாளை பஷீர் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். pp. 196–202.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி_நிகேதன்_ஆசிரமம்&oldid=3742827" இலிருந்து மீள்விக்கப்பட்டது