கோ. வேங்கடாசலபதி

காந்தியவாதி

கோ. வேங்கடாசலபதி (சூலை 30, 1909 - சூன் 13, 1969) மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டி அருகேயுள்ள கோபி நாயக்கன் பட்டியில் பிறந்தார்.[1]

கோ.வேங்கடாசலபதி
பிறப்புசூலை 30, 1909
தே. கல்லுப்பட்டிமதுரை மாவட்டம் தமிழ்நாடு
இறப்புசூன் 13, 1969

அரசியல் பணிகள்

தொகு

இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு 1931 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளில் கைதானார். தனது ஊரில் கிராம ஊழியர் சங்கத்தை ஏற்படுத்தினார். அதை அவரது நண்பரும், சுதந்திரப் போராட்ட வீரரருமான காமராஜர் துவக்கி வைத்தார். 1937 ஆம் ஆண்டில் மதுரை ஜில்லா போர்டு துணைத் தலைவரானார்.

பொதுப் பணிகள்

தொகு
  • தே.கல்லுப்பட்டியில் 1940 ல் காந்தி நிகேதன் ஆசிரமத்தைத் துவக்கினார்.
  • காந்தியின் அறிவுரைப்படி 1946 ல் ஆதாரக் கல்வி பள்ளி துவக்கப்பட்டது. பின் 1953ல் உயர் ஆதாரக் கல்வி பள்ளியாக உயர்ந்தது.
  • காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா ஓய்வுக் காலத்தில் ஆசிரமம் வந்தார். அவர் சட்டப்பூர்வமாக 1956 ல் ஆசிரமத்தை பதிவு செய்து முதல் தலைவரானார்.
  • தமிழக முதல்வராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், அரசின் ஊரக வளர்ச்சித்துறை கமிஷனராக கோ.வே.,வை நியமித்தார். கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக "பிர்கா வளர்ச்சி' எனும் திட்டத்தை செயல்படுத்தினார்.
  • சென்னை கிராமப் பஞ்சாயத்து சட்டத்தை (1950) நடைமுறைப்படுத்துதல், பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கிய சென்னை மாநில பஞ்சாயத்துச் சட்டம் உருவாவதிலும் (1958) முக்கியப் பங்கு வகித்தார்.
  • இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், பூமிதான இயக்க நிறுவனர் வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளாணி, பக்தவச்சலம் மற்றும் பல்வேறு தலைவர்கள், கவர்னர்கள் இவர் தொடக்கிய காந்திநிகேதன் ஆசிரமத்திற்கு வந்துள்ளனர்.
  • இந்த ஆசிரமத்தின் மூலம் கிராமங்களில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு கதர், தேனீ வளர்ப்பு, மட்பாண்டம், பனை வெல்லம், கைக்குத்தல் அரிசி, கைக்காகிதம், தோல் உற்பத்தி உட்பட பல தொழில்கள் உருவாக்கப்பட்டு பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._வேங்கடாசலபதி&oldid=3943537" இலிருந்து மீள்விக்கப்பட்டது