காந்தி மண்டேலா விருதுகள்

காந்தி மண்டேலா விருதுகள் (Gandhi Mandela Awards), காந்தீயம் மற்றும் நெல்சன் மண்டேலாவின் கொள்கைகள்,[1] சமூக சேவை மற்றும் சமூக மேம்பாடு (ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்) ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் மதிப்புமிக்க பன்னாடு விருது ஆகும்.

காந்தி மண்டேலா விருதுகள்
Gandhi Mandela Awards
விருது வழங்குவதற்கான காரணம்அமைதி, சமூக நல்லிணக்கம், கலாச்சாரம், சுகாதார மேம்பாடு, விளையாடு, கல்வி, புதுமை
இதை வழங்குவோர்காந்தி மண்டேலா அறக்கட்டளை
முதலில் வழங்கப்பட்டது2019
Highlights
பெறப்பட்ட விண்ணப்பங்கள்12
இணையதளம்gandhimandelafoundation.com

உருவாக்கம்

தொகு

மதிப்புமிகு காந்தி மண்டேலா அமைதி விருதாளர்களை நீதிபதி கொ. கோ.பாலகிருஷ்ணன் (தேசிய மனித உரிமைக் கழகம் இந்தியாவின் முன்னாள் தலைவர்) உள்ளிட்ட உயர்மட்ட அரசியலமைப்பு நடுவர் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவின் நீதிபதி தீபக் மிஸ்ரா (இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி), நீதிபதி கேதர் நாத் உபாத்யாய் (நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி & நேபாள தேசிய மனித உரிமைக் கழக முன்னாள் தலைவர்), நீதிபதி எம். டி. தபசுல் இசுலாம் (நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி), நீதியரசர் ஜஸ்டிசு கியான் சுதா மிஸ்ரா (இந்தியாவின் முன்னாள் நீதிபதி உச்ச நீதிமன்றம்) ஆகியோரால் 2019-ல் "காந்தி மண்டேலா அறக்கட்டளை" மூலம் இந்தப் பரிசு நிறுவப்பட்டது.

இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. விருதுக்கான விண்ணப்பங்களை ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் ஆகியோர் உள்ளடக்கிய குழு வரவேற்கிறது.[2][3][4]

மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் 20ஆம் நூற்றாண்டின் முன்மாதிரியான இனவெறி எதிர்ப்பு மற்றும் காலனித்துவ எதிர்ப்புத் தலைவர்கள். இருவரும் அந்தந்த நாடுகளில் தந்தையாக அறியப்படுகிறார்கள். இருவரும் தங்கள் நாட்டு மக்களாட்சியினை வடிவமைக்க உதவினார்கள். காந்தி மண்டேலா விருது இரண்டு பெரிய மனிதர்களின் பாரம்பரியத்தைச் செயல்படுத்துபவர்களை நினைவுபடுத்துகிறது.[5][6][7]

விருது நடுவர்கள்

தொகு
  • நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் (இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் இந்தியாவின் முன்னாள் தலைவர்).
  • நீதிபதி தீபக் மிஸ்ரா (இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி)
  • நீதிபதி கேதார் நாத் உபாத்யாய் (நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி & நேபாளத்தின் மனித உரிமைகள் ஆணையம் முன்னாள் தலைவர்)
  • நீதிபதி எம். டி. தபசுல் இசுலாம் (நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி)
  • நீதிபதி கியான் சுதா மிஸ்ரா (இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி)

முதலாவது விருதின் பரிந்துரைகள்

தொகு
  • நேபாள பிரதமர் கட்கா பிரசாத் சர்மா ஒலி
  • ஜாம்பியாவின் முதல் குடியரசுத் தலைவர் & தந்தை கென்னத் கவுண்டா
  • வங்கதேசத்தின் முதல் ஜனாதிபதி மற்றும் தந்தை மறைந்த சேக் முஜிபுர் ரகுமான்
  • இலங்கையின் முதல் ஜனாதிபதி மற்றும் தந்தை மறைந்த டி. எஸ். சேனநாயக்க
  • இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி
  • ஐக்கிய அமீரகம்
  • புருண்டி குடியரசின் முதல் பெண்மணி டெனிஸ் புகுமி நுகுருஞ்சிசா
  • காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைவர் திரு. பெலிக்ஸ் சிசெகெடி
  • டோகோவின் பிரதமர் திரு. கோமி செலோம் கிளாசோ
  • காங்கோ குடியரசின் தூதர் திரு. ஆண்ட்ரி போக்

மேற்கோள்கள்

தொகு
  1. "Gandhi Mandela Award 2019 will honour Heads of State and Government". Hindustan Times (in ஆங்கிலம்). 31 October 2019.
  2. Corridors, Power. "BRICS Chamber of Commerce to be a part of Gandhi Mandela Award 2019". www.powercorridors.in (in ஆங்கிலம்).
  3. "Gandhi Mandela Award 2019, an initiative to commemorate All Time World Pioneers". www.aninews.in (in ஆங்கிலம்).
  4. "Gandhi Mandela Award 2019, an initiative to commemorate All Time World Pioneers". News18.
  5. टाइम्स, पंचायती. "गाँधी-मंडेला अवार्ड्स 2019 में ब्रिक्स चैंबर ऑफ कॉमर्स भी सम्मिलित होगा". www.panchayatitimes.com (in ஆங்கிலம்).
  6. Corridors, Power. "Gandhi Mandela Award for excellence". www.powercorridors.in (in ஆங்கிலம்).
  7. "Gandhi Mandela Award 2019, an initiative to commemorate All Time World Pioneers". News18.