கானாடிகாவு விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் சுவாமி கோயில்
கானாடிகாவு விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் சுவாமி கோயில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு பழமையானதும், புனிதமானதுமான விஷ்ணுமாயா கோயிலாகும். இக்கோயில் கலாச்சார தலைநகரான திருச்சூருக்கு தென்மேற்கே 20 கி.மீ.தொலைவில் பெரிங்கோட்டுகரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1][2][3]
கோயிலின் மூலவர் விஷ்ணுமாயா மற்றும் 390 குட்டிச்சாத்தன்கள் ஆவர்.[4] ஆன்மிக குருவும் மடாதிபதியுமான பிரம்மஸ்ரீ விஷ்ணுபாரதீய ஸ்வாமி கானடிகாவு கோயிலின் முதன்மைப் பூசாரி ஆவார்.[5] இக்கோயில் தியர் சமூகத்தினரின் குலதெய்வக் கோயிலாகக்கருதப்படுகிறது. விஷ்ணுமாயா தியர்கள் வழிபட்ட தெய்வங்களில் ஒன்றாகும்.
துணைத்தெய்வங்கள்
தொகுஇக்கோயிலில் பத்ரகாளி, புவனேஸ்வரி, குக்ஷிகல்பம், 390 குட்டிச்சாத்தான்கள், நாகராஜா, நாகயக்ஷி மற்றும் பிரம்மராட்சஸ் உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன.
வரலாறு
தொகுபுராணத்தின் படி, கூனமுத்தப்பன் என்ற முனிவர், மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காகவும், இறைவன் அருளைப் பெறவும் கடும் தவம் புரிந்தார். தேவி விரைவில் அவர் முன் தோன்றினாள். பரமேஸ்வரரின் மகனான சாத்தன் சுவாமியை மகிழ்விக்கவும், ஆட்கொள்ளவும் உதவுகின்ற மந்திரத்தை தனக்குத் தருமாறு கூனமுத்தப்பன் தேவியிடம் வேண்டினார். தவத்தில் மகிழ்ந்த தேவி, சாத்தனிடம் மூல மந்திரத்தையும், தினமும் அவனை வழிபட தியான மந்திரத்தையும் சொன்னாள். பின்னர் அவர் இமயமலைக்குச் சென்று கடுமையான தவம் செய்தார். விஷ்ணுமாயா குட்டிச்சாத்தன் சுவாமி அவர் முன் தோன்றினார், அவர் தெய்வத்துடன் பேரிங்கோட்டுக்கரைக்குத் திரும்பினார். பேரிங்கோட்டுக்கரையை அடைந்த பிறகு, தற்போது கனடி குடும்பம் இருக்கின்ற இடத்தில் விஷ்ணுமாயா சாத்தன் சுவாமியை நிறுவினார்.[6]
திருவிழாக்கள்
தொகுகேரளா, குறிப்பாக திருச்சூர் திருவிழாக்களின் பூமியாகக் கருதப்படுகிறது. பல சமயத்தைச் சேர்ந்தவர்கள் இணக்கமாக வாழ்ந்து வருவதோடு, ஆண்டு முழுவதும் முழு மனதுடன் பண்டிகைகளைக் கொண்டாடிவருகின்றனர். அவ்வகையில் கானடிக்காவு விழாவிற்காக பெயர் பெற்றதாகும்.[3] திருவெல்லட்டு விழா[4] தொட்டாம்பட்டு விழா ஆகியவையும் இங்கு நடைபெறுகின்ற பிற விழாக்களாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Kanadikavu Vishnumaya". Amritha Television Channel.
- ↑ Pilgrimage to Temple Heritage 2017. Infokerala Communications Pvt. Ltd.
- ↑ 3.0 3.1 "Kanadikavu temple annual fest begins". New Indian Express. 9 February 2010. Archived from the original on 16 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 4.0 4.1 "Thiravellattu Mahotsavam" (PDF). Kerala Tourism Department.
- ↑ "Vishnumaya".
- ↑ "Kanadi Kavu Sree Vishnumaya Kuttichathan Swami Temple, Kerala (9961271444)".