கான் பகதூர் முஹம்மது உஸ்மான்

இந்திய அரசியல்வாதி

கான் பகதூர் சர் முஹம்மது உஸ்மான் (Mohammad Usman of Madras ) (1884 – 1 ஜனவரி 1960) ஓர் இந்திய அரசியல்வாதி. பொபிலி அரசர் முதல்வராக இருந்தபோது இவர் சென்னை மாகாணத்திற்கு ஆளுனராக இருந்தார்.[1]

கான் பகதூர் முஹம்மது உஸ்மான்
பிறப்பு1884
தஞ்சாவூர், சென்னை மாகாணம் (தற்போது தமிழ்நாடு)
இறப்பு1 பிப்ரவரி 1960
படித்த கல்வி நிறுவனங்கள்மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரி
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுசென்னை மாகாண ஆளுநர், நீதிகட்சி தலைவர்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது யாகூப் என்பவருக்கு மகனாக பிறந்தார்.[2] இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.[3][4] பின்னர் இவர் நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட துவங்கினார். யுனானி மருத்துவத்தில் திறமையான மருத்துவராகவும் இருந்தார்.[5][6]

அரசியல் வாழ்க்கை

தொகு

உஸ்மான் 1920 ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[7] 1920 ஆம் ஆண்டு முதல் 1923 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். பிறகு 1924 ஆம் ஆண்டு முதல் - 1925 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியின் தலைவராக செயல்பட்டார்.[8] 1921 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலைமைச்சர் பனகல் அரசர் உள்நாட்டு மருத்துவ பற்றிய ஆய்வு குழுவை உருவாக்கினார்.[6][9] அந்த குழுவுக்கு உஸ்மான் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[6][10]

1922 ஆம் ஆண்டு இந்த குழு ஆயுர்வேத மருத்துவம் அறிவியலை அடிப்படையாக கொண்டது என்றும், ஆனால் அந்த மருத்துவம் மக்களிடையே பயன்பாட்டின் ஆர்வம் குறைத்து வருவதாக முதலமைச்சர் பனகல் அரசரிடம் அறிக்கை சமர்பித்தது.[11] உஸ்மான் 1930 ஆம் ஆண்டு தென்னிந்திய முஹம்மதன் கல்வி குழுமத்தின் தலைவராக நியமிக்கபட்டார்.[12]

1930 ஆம் ஆண்டு பொபிலி அரசர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவரின் அமைச்சரவையில் உஸ்மானுக்கு உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த அமைச்சர் பதவியை உஸ்மான் 1934 ஆம் ஆண்டு இராஜினாமா செய்துவிட்டு ஏ.டி.பன்னீர்செல்வம் என்பவரை நியமித்தார்.[13] அப்போது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாகியது.[14]

உஸ்மான் தன்னுடைய பதவிக்கு மற்றொரு முஸ்லிமை பரிந்துரைக்காமல் கிருத்துவத்தை சேர்ந்தவரை பரிந்துரைத்தது தான் முஸ்லிம்களின் அதிருப்திக்கு காரணம். இதனால் வகுப்புவாத மோதல்கள் சில இடங்களில் நடந்தன.[15]

 
கான் பகதூர் முஹம்மது உஸ்மான்

1935 ஆம் ஆண்டு உஸ்மான் ரோடரி சங்கத்தின் முதல் இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[16]

சென்னை மாகாணத்தின் ஆளுநர்

தொகு

1934 ஆம் ஆண்டு மே 16 முதல் 11934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார்.[17] இவர் சென்னை மாகாணத்திற்கு ஆளுநராக தேர்வு செய்யபட்ட முதல் இந்தியர் ஆவார்.[17]

இறப்பு

தொகு

1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று உஸ்மான் இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு 76 வயது.[18] இவரின் நினைவாக சென்னை தியாகராய நகரின் முக்கிய சாலைக்கு உஸ்மான் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Jagadisan, T. N., V. S. Srinivasa Sastri (Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India, 1969), p. 171
  2. More, Pg 247
  3. Cang, Joel (1945). United Nations Who's who in Government and Industry. Allied Publications. p. 112.
  4. S. Muthiah (10 December 2007). "Third from right?". தி இந்து. http://www.hinduonnet.com/thehindu/mp/2007/12/10/stories/2007121050200500.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "A hospital by any name". தி இந்து. 21 July 2008. http://www.hinduonnet.com/thehindu/mp/2008/07/21/stories/2008072150860500.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 6.2 Arnold, David (1987). Science, Technology, and Medicine in Colonial India. Cambridge University Press. p. 184. ISBN 978-0-521-56319-2.
  7. Jinnah, Mohammad Ali; S. M. Zaman (1995). Qua'id-i-Azam and Education. National Institute of Historical and Cultural Research. p. 575. ISBN 978-969-415-035-2.
  8. Nalanda Year-book & Who's who in India. 1947. p. 486.
  9. Rajaraman, P. (1988). The Justice Party: A Historical Perspective, 1916–37. Poompozhil Publishers. p. 242.
  10. Rajaraman, P. (1988). The Justice Party: A Historical Perspective, 1916–37. Poompozhil Publishers. p. 242.
  11. Bala, Poonam (2007). Medicine and Medical Policies in India: Social and Historical Perspectives. Lexington Books. pp. 103. ISBN 978-0-7391-1322-6.
  12. More, Pg 121
  13. Mallampalli, Chandra (2004). Christians and Public Life in Colonial South India, 1863–1937: Contending with Marginality. Routledge. pp. 152–153. ISBN 978-0-415-32321-5.
  14. Mallampalli, Chandra (2004). Christians and Public Life in Colonial South India, 1863–1937: Contending with Marginality. Routledge. pp. 152–153. ISBN 978-0-415-32321-5.
  15. Mallampalli, Chandra (2004). Christians and Public Life in Colonial South India, 1863–1937: Contending with Marginality. Routledge. pp. 152–153. ISBN 978-0-415-32321-5.
  16. "A 75-year-old legacy". The Hindu. 11 August 2003. http://www.thehindujobs.com/thehindu/mp/2003/08/11/stories/2003081100140300.htm. 
  17. 17.0 17.1 Muthiah, S. (20 September 2004). "A Mylapore landmark". தி இந்து. 
  18. Sen, Siba Pada (1974). Dictionary of National Biography. Institute of Historical Studies. pp. 375.