முதன்மை பட்டியைத் திறக்கவும்

காபூசு இப்னு சஈத் ஆலு சஈத்

காபூசு பின் சஈத் ஆலு சஈத் (அரபு மொழி: قابوس بن سعيد آل سعيد; Qābūs ibn Sa'īd Āl Sa'īd; பிறப்பு 18 நவம்பர் 1940[1]) ஓமான் நாட்டு சுல்தானாக ஆட்சியில் உள்ளார். அவர் தன்னுடைய தந்தை சயித் பின் தைமூரை 1970ல் ஆட்சியிலிருந்து கவிழ்த்து விட்டு பதவியில் வந்தார். இவர் அல் சைத் அரசர்களின் 14வது-தலைமுறை அரசராவார்.[2]. இவர் கடந்த 40 ஆண்டுகளாக ஓமானை ஆட்சி செய்து வருகிறார். இவருடைய தந்தைக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியைப் பிடித்தார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. மூன்று சகோதரிகள் உள்ளனர். அதனால், ஏனைய அரபு நாடுகள் போலன்றி இவர் இதுவரை தன்னுடைய வாரிசு யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் தனக்குப் பின் யார் ஆட்சியில் வரவேண்டும் என்று உயில் எழுதி முத்திரையிட்டு இராணுவ அமைச்சரிடம் கொடுத்துள்ளார்.

காபூஸ் இப்னு சஈத் ஆலு சஈத்
قابوس بن سعيد آلسعيد
சுல்தான் of ஓமான்
ஆட்சிக்காலம் 23 சூலை 1970 – தற்போது
(49 ஆண்டுகள், 119 நாட்கள்)
முன்னையவர் சைத் பின் தைமூர்
வாழ்க்கைத் துணை சைதா நவ்வல் பின்த தாரிக்
குடும்பம் அல் சைத்
தந்தை சஈத் பின் தைமூர்
தாய் மவ்சூன் பின்தி அஹ்மத்
பிறப்பு 18 நவம்பர் 1940 (1940-11-18) (அகவை 79)
சலாலா, ஓமான்
16°59′54.90″N 54°05′38.04″E / 16.9985833°N 54.0939000°E / 16.9985833; 54.0939000
சமயம் இபாதி இசுலாம்

ஆதாரம்தொகு