காபூல் சாகி

காபூல் சாகி அல்லது இந்து சாகி (Kabul Shahi dynasties) (ஆட்சிக் காலம்: கி பி 500 - 1010) [2] [3] [4][5]குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்[6]இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கில் காபூல் சமவெளி, கந்தகார், வடக்கு மேற்கு பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் சமவெளிப் பகுதிகளை, கி பி 500 முதல் கி பி 1010 முடிய ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் ஆண்ட இந்து மற்றும் பௌத்த சமய சாகி அரச குலங்களாகும். [7]

காபூல் சாகி
காபூல் சாகி
கி பி 500–1010/1026
தலைநகரம்காபூல்
வைகிந்த் (870–1010)[1]
பேசப்படும் மொழிகள்சமஸ்கிருதம்
சமயம்
பௌத்தம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
சத்திரியர்
ஷா
ஷா-இன்-ஷா (மன்னாதிமன்னன்)
 
• கி பி 700
கபிசாவின் கிங்கலன்
• 964–1001
ஜெயபாலன்
• 1001–1010
அனந்தபாலன்
வரலாற்று சகாப்தம்மத்தியகால இந்திய அரசுகள்
• தொடக்கம்
கி பி 500
• முடிவு
1010/1026
தற்போதைய பகுதிகள் ஆப்கானித்தான்
 பாக்கித்தான்  இந்தியா
காபூல் சாகி அரசுகளும், அண்டை நாடுகளும்

கி பி 870-இல் சாகி அரச குலம் சமய அடிப்படையில், இந்து சாகி, பௌத்த சாகி என இரண்டு அரச குலங்களாகப் பிரிந்தது.[5]

கி பி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில், காபூல் பகுதியில் சுற்றுப் பயணம் செய்த யுவான் சுவாங், காபூல் பகுதியை ஆட்சி செய்த சத்திரிய மன்னரின் பெயரை சாகி கிங்கலன் எனத் தற்கால ஆப்கானித்தான் நாட்டின் கார்தேஜ் நகரத்தின் கல்வெட்டுக்களில் குறித்திருப்பதை குறிப்பெடுத்துள்ளார்.

இந்து சாகி மன்னர்கள், பௌத்தர்களும், இந்துக்களும் அதிகம் வாழ்ந்த காபூல் மற்றும் கந்தகார் பகுதிகளை ஆண்டனர். இறுதி இந்து சமய சாகி அரச குல மன்னர்களில் புகழ் பெற்றவர்கள் ஜெயபாலன், ஆனந்தபாலன் மற்றும் திரிலோசனபாலன் ஆவர். இவர்கள் கஜினியின் முகமதை எதிர்த்தனர். பின்னர் வட இந்தியப் பகுதிகளில் தங்கள் அரசை மாற்றிக் கொண்டனர். கஜினி முகமதுவின் தொடர் படையெடுப்பால் காபூல் சாகி குல அரசின் ஆட்சி கி பி 1026-இல் முடிவுற்றது.

முக்கிய சாகி ஆட்சியாளர்கள்

தொகு
 • கபிசாவின் கிங்கலம் (7-வது நூற்றாண்டு)
 • கில்ஜித்தின் படோலதேவன் என்ற நவசுரேந்திராத்தியன் நந்தின் (6-வது–7-வது நூற்றாண்டு)
 • கில்ஜித்தின் ஸ்ரீதேவன் என்ற சுரேந்திர விக்கிரமாதித்தியன் (6-வது–7-வது நூற்றாண்டு)
 • படோலதேவன் என்ற வஜிராதித்தியன் (6-வது–7-வது நூற்றாண்டு)
 • காபூல் கள்ளர் என்ற லல்லியா (890-895)
 • கமலுகன் (895–921)
 • பீமன் (921–964)
 • இஷ்டபாலன் (?)
 • ஜெயபாலன் (964–1001)
 • அனந்தபாலன் (1001 - c. 1010)
 • திரிலோசனபாலன் (1010 - 1021-22) ;
 • பீமபாலன் (1022–1026)

அடிக்குறிப்புகள்

தொகு
 1. André Wink, Early Medieval India and the Expansion of Islam: 7th-11th Centuries, (Brill, 2002), 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780391041257(subscription required)
 2. as in: Rajatarangini, IV, 140-43, Kalahana.
 3. as in inscriptions: See: Hindu Sahis of Afghanistan and the Punjab, 1972, p 111, Yogendra Mishra.
 4. as in: Tarikh-al-Hind, trans. E. C. Sachau, 1888/1910, vol ii, pp 10, Abu Rihan Alberuni; Sehrai, Fidaullah (1979). Hund: The Forgotten City of Gandhara, p. 1. Peshawar Museum Publications New Series, Peshawar.
 5. 5.0 5.1 Sehrai, Fidaullah (1979). Hund: The Forgotten City of Gandhara, p. 2. Peshawar Museum Publications New Series, Peshawar.
 6. Kohzad, Ahmad Ali, "Kabul Shāhāni Berahmanī", 1944, Kabul
 7. Shahi Family. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2006. Encyclopædia Britannica Online. 16 October 2006.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=காபூல்_சாகி&oldid=3485570" இலிருந்து மீள்விக்கப்பட்டது