ஜெயபாலன் (Jayapala), (964–1001) பஞ்சாபின் அந்தண ஜஞ்சுவா குலத்தைச் சேர்ந்த காபூல் சாகி வம்ச ஆட்சியாளர் ஆவார். இவரது ஆட்சியில் தற்கால ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணம் முதல் காஷ்மீர் வரையும் மற்றும் பாகிஸ்தானின் சிர்இந்த்-பதேகர் முதல் முல்தான் வரை இருந்தது. பெசாவர் இவற்றின் மையத்தில் இருந்தது.[1]

ஜெயபாலன்
கடும் பனிப்பொழிவில் சிக்கிய ஜெயபாலனின் படைகள்
குழந்தைகளின்
பெயர்கள்
அனந்தபாலன்
தந்தைஉத்பாலன்

இவர் உத்பாலனின் மகனும், அனந்தபாலனின் தந்தையும் ஆவார்.[1]பரமார பட்டாரக மகாராஜாதிராஜா ஸ்ரீ ஜெயபாலதேவன் என்ற இவரது பட்டப் பெயர் பரித்கோட் கல்வெட்டுக் குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளது.[2]

வரலாறு

தொகு

தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் பகுதிகளைக் கொண்ட இசுலாமிய கஜானவிப் பேரரசின் செபுக் திஜினுக்கும், இந்து சமய காபூல் சாகி ஆட்சியாளர்களுக்கிடையே தொடர்ந்து மோதல் போக்குகள் இருந்து கொண்டே இருந்தது.[3] செபுக் திஜின், ஜெயபாலனை வென்றதால், ஜெயபாலன் செபுக்திஜினுக்கு கப்பம் கட்ட வேண்டி வந்தது.[3] ஒரு முறை கப்பம் கட்ட மறுத்த ஜெயபாலன், செபுக் திஜனை போர்க் களத்தில் சந்தித்தார்.[3] அப்போரில் செபுக் திஜின், ஜெயபாலனை வென்றதால், ஜெயபாலன் காபூல் சமவெளி மற்றும் சிந்து ஆற்றின் பகுதிகளுக்கிடையே இருந்த தனது இராச்சியத்தின் பகுதிகளை விட்டு விட்டு, சிவாலிக் மலையில் உள்ள காஷ்மீரில் தனது புதிய அரசை அமைத்துக் கொண்டான்.[1]

1001-இல் ஜெயபாலனின் மறைவிற்குப் பின் அவரது மகன் அனந்தபாலன் காபூல் சாகியின் பட்டத்திற்கு வந்தார்.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Ameer Nasir-ood-Deen Subooktugeen". Ferishta, History of the Rise of Mohammedan Power in India, Volume 1: Section 15. Packard Humanities Institute. Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.
  2. Sailendra Nath Sen. Ancient Indian History and Civilization. New Age International. p. 342. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
  3. 3.0 3.1 3.2 3.3 The Cambridge history of Islam, Cambridge University Press, 1977, p. 3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-29137-2, ... Jayapala of Waihind saw danger in the consolidation of the kingdom of Ghazna and decided to destroy it. He therefore invaded Ghazna, but was defeated ... {{citation}}: Unknown parameter |editors= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயபாலன்&oldid=4059189" இலிருந்து மீள்விக்கப்பட்டது