சிர்இந்த்-பதேகர்

சிர்இந்த்-பதேகர் (Sirhind-Fatehgarh) (பஞ்சாபி மொழி: ਸਰਹਿੰਦ-ਫ਼ਤਿਹਗੜ੍ਹ) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.

சிர்இந்த்-பதேகர்
ਸਰਹਿੰਦ-ਫ਼ਤਿਹਗੜ੍ਹ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதேகாட் சாகிப் மாவட்டம்
மக்கள்தொகை
 (2013)
 • மொத்தம்60,852
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
[1]
பதேகர் சாகிப் குருத்துவார்], சிர்இந்த்-பதேகர்

மக்கள் தொகையியல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சிர்இந்த்-பதேகர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 58,097 ஆகும். அதில் ஆண்கள் 30,642; பெண்கள் 27,455 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 –2011 ) ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு, பெண்கள் 896 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.49% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 87.28 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 79.28 % ஆகவும் உள்ளது. 6 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 6146 ஆக உள்ளது. இந்நகரத்தில் 11,899 வீடுகள் உள்ளது. [1]

58,097 மக்கள் தொகை கொண்ட இந்நகரத்தில் சீக்கியர்கள் 50.55%; இந்துக்கள் 45.86%; இசுலாமியர்கள் 2.81% ; கிறித்தவர்கள் 0.37% ; மற்றவர்கள் 0.41% ஆக உள்ளனர்.

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.

பெயர்க்காரணம்

தொகு

சர்-இ-ஹிந்த் என்பதற்கு இந்துஸ்தானின் நுழை வாயில் எனப் பொருள் ஆகும். [2][3]

வரலாறு

தொகு
 
சிர்இந்த்-பதேகர் அருகில் உள்ள ராம்கர் கோட்டையின் நுழைவு வாயில்

இந்நகரத்தில் 22 மே 1710-இல் பண்டா சிங் பகதூர் தலைமையிலான கால்சா படைகளுக்கும், வசீர்கான் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும் நடைபெற்ற சாப்பர் சிறீப் போரில் சீக்கியப் படைகள் வென்றது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்இந்த்-பதேகர்&oldid=4058618" இலிருந்து மீள்விக்கப்பட்டது