பண்டா சிங் பகதூர்

பந்தா சிங் பகதூர் அல்லது பண்டா பகதூர் (ஆங்கிலம்: Banda Singh Bahadur; Hindi: बन्दा सिंह बहादुर)[2][3][4] தில்லியின் சீக்கிய கால்சா இராணுவத்தின் தலைவராக 27 அக்டோபர் 1670 – 9 சூன் 1716 முடிய பணியாற்றியவர்.

பந்தாசிங் பகதூர்
ਬੰਦਾ ਸਿੰਘ ਬਹਾਦਰ
சப்பாஅரி சிரியில் உள்ள பந்தாசிங் பகதூரின் சிலை
பிறப்புலட்சுமனன் தேவ்
27 அக்டோபர் 1670
ரஜௌரி, ஜம்மு
இறப்பு9 சூன் 1716
தில்லி, முகலாயப் பேரரசு
தேசியம்சீக்கியம்
மற்ற பெயர்கள்குர்பக்ஷ் சிங்
செயற்பாட்டுக்
காலம்
1708-1716
அறியப்படுவது
பின்வந்தவர்சஜ்ஜா சிங் தில்லான்
பிள்ளைகள்1 (அஜய் சிங்) 2 (ரஞ்சித் சிங்)

பண்டா சிங் பகதூர் 15 வயதில் துறவறம் மேற்கொண்டு மாதோ தாஸ் எனும் பெயரில் மகாராட்டிர மாநிலம் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள நாந்தேட்டில் ஒரு மடத்தை நிறுவினார். செப்டம்பர் 1708-இல் இவரது மடத்திற்கு வருகை புரிந்த குரு கோவிந்த் சிங்கின் சீடராகி சீக்கிய சமயம் தழுவினார். கோவிந்த் சிங் இவரது பெயரை பண்டா சிங் பகதூர் என புதிய பெயர் சூட்டி வாழ்த்து கூறினார்.

குரு கோவிந்த் சிங் அறிவுரைப் படி, ஆயுதம் தாங்கிய சீக்கிய கால்சா இராணுவத்தின் படைத்தலைவரான பண்டா பகதூர் சிங் முதலில் முகலாயப் பேரரசின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான சமானா நகரை நவம்பர் 1709-இல் தாக்கி கைப்பற்றினார்.[3] பஞ்சாப் பகுதியில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்ட பண்டா பகதூர் சிங், பஞ்சாபில் ஜமீந்தாரி நிலவுடமை முறையை நீக்கினார். வேளாண் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமை என அறிவித்தார்.

7 டிசம்பர் 1715-இல் குர்தாஸ் நங்கல் கோட்டையில் இருந்த பண்டா பகதூர் சிங்கையும் 780 சீக்கிய வீரர்களையும் முகலாயப் படைகள் கைது செய்தனர். பண்டா பகதூர் சிங்கை இரும்புக் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்து தில்லி கொண்டு செல்லப்பட்டார்.[5] தில்லியில் வைத்து பண்டா பகதூர் சிங்கையும், அவருடன் இருந்த சீக்கிய வீரர்களையும் முகலாயப் படைகள் சித்ரவதை செய்தனர்.[6][7][8] பண்டா சிங் பகதூரையும், அவருடன் இருந்த சீக்கியப் போர்வீரர்களையும் செங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இசுலாமிய சமயத்திற்கு மாற கட்டாயப் படுத்தப்பட்டனர்.[8] முகலாயப் பேரரசின் இக்கோரிக்கையை ஏற்காத பண்டா பகதூர் சிங்கையும், அவருடன் இருந்த 700 சீக்கிய வீரர்களையும் சித்திரவதை செய்து, தலைகளை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.[6][9][10]

பண்டா பகதூர் கண்ட போர்க் களங்கள்

தொகு
 
சாப்பர் சிறீ போரில் தலைமை தாங்கிய பண்டா பகதூரின் நினைவிடம், மொகாலி, பஞ்சாப்

பண்டா பகதூரின் போர் நினைவிடங்கள்

தொகு
 
பண்டா சிங் பகதூர் 300-வது நினைவாண்டு கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், புது தில்லி

பண்டா சிங் பகதூர் முகலாயப் படைகளுக்கு எதிராக நடத்திய சாப்பர் சிறீ போர் நினைவாக எண்கோண வடவத்தில் அமைந்த பதே புர்ஜ் போர் நினைவிடம் 328 அடி உயரம் கொண்டது. இதன் உயரத்தில் அமைந்த குவிமாடம் எஃக்கினால் செய்யப்பட்டதாகும்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. Sagoo, Harbans (2001). Banda Singh Bahadur and Sikh Sovereignty. Deep & Deep Publications.
  2. Rajmohan Gandhi, Revenge and Reconciliation, pp. 117–18
  3. 3.0 3.1 Ganda Singh. "Banda Singh Bahadur". Encyclopaedia of Sikhism. Punjabi University Patiala. Retrieved 27 January 2014.
  4. "Banda Singh Bahadur". Encyclopedia Britannica. Retrieved 15 May 2013.
  5. Duggal, Kartar (2001). Maharaja Ranjit Singh: The Last to Lay Arms. Abhinav Publications. p. 41. ISBN 9788170174103.
  6. 6.0 6.1 Johar, Surinder (1987). Guru Gobind Singh. The University of Michigan: Enkay Publishers. p. 208. ISBN 9788185148045.
  7. Sastri, Kallidaikurichi (1978). A Comprehensive History of India: 1712-1772. The University of Michigan: Orient Longmans. p. 245.
  8. 8.0 8.1 Singh, Gurbaksh (1927). The Khalsa Generals. Canadian Sikh Study & Teaching Society. p. 12. ISBN 0969409249.
  9. "Massacre of the Sikhs and Banda Singh at Delhi". Archived from the original on 2017-01-06. Retrieved 2017-02-18.
  10. Sastri, Kallidaikurichi (1978). A Comprehensive History of India: 1712-1772. The University of Michigan: Orient Longmans. p. 245.
  11. "Baba Banda Singh Bahadur War Memorial, Fateh Burj in Ajitgarh". Ajitgarhonline.in. 2011-11-30. Retrieved 2016-12-03.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டா_சிங்_பகதூர்&oldid=4195775" இலிருந்து மீள்விக்கப்பட்டது