காப்பாடு
காப்பாடு (Kappad - மலையாளம்: കാപ്പാട്) இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமம். இங்கு 2007 இல் ரூபாய் 1.5-கோடியில் கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கொடிவேரி பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
காப்பாடு (കാപ്പാട്) Kappakadavu | |||||
— கிராமம் — | |||||
ஆள்கூறு | 11°23′6″N 75°43′3″E / 11.38500°N 75.71750°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | கேரளா | ||||
மாவட்டம் | கோழிக்கோடு | ||||
வட்டம் | கோயிலாண்டி | ||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
இந்த கிராமம் வரலாற்று சிறப்பு மிக்கது. மாபெரும் மாலுமியான வாஸ்கோ ட காமா மூன்று பெரிய கப்பல்களில், 170 மாலுமிகளோடு, கி.பி. 1498 ஆம் ஆண்டு மே 27 அன்று முதல்முதலாக இந்தியத் துணைக்கண்டக் கரையில் கால்பதித்த இடம் இதுவாகும். இதற்கான நினைவுச் சின்னம் இங்கே பாதுகாக்கபட்டுவருகிறது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை உள்ளதுபோல் கப்பாடு பகுதியிலும் ஒரு பாறை கடலிது துருத்திக்கொண்டு உள்ளது. இந்த கிராமம் கோழிக்கோட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.