காப்பு ராஜையா

காப்பு ராஜையா ( Kapu Rajaiah ) (7 ஏப்ரல் 1925 - 20 ஆகஸ்ட் 2012) ஒரு இந்திய ஓவியர். [1] இவர் நாட்டுப்புற வாழ்க்கை ஓவியங்களை சித்தரிப்பதற்காக நன்கு அறியப்பட்டார். [2] மேலும்,இவரது படைப்புகள் உலகம் முழுவதும் காட்டப்பட்டன. 1963 இல் தொடங்கப்பட்ட லலிதா கலா சமிதியின் நிறுவனர் ஆவார். அதன் விரிவாக்கம் கலா பவனில் திறக்கப்பட்டது.

கலா ரத்னா
முனைவர் காப்பு ராஜையா
பிறப்பு7 ஏப்ரல் 1925
சித்திபேட்டை, ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா, இந்தியா)
இறப்பு20 ஆகஸ்ட் 2012 (87 வயது)
சித்திபேட்டை
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஓவியக் கலை, இந்திய நாட்டுப்புறக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
அனுசுயா

வாழ்க்கை

தொகு

ராஜையா மேதக்க்கின் சித்திபேட்டையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். ஐதராபாத்தில் உள்ள அரசு கலைப் பள்ளியில் முடித்தார்.

இவரது நகாஷி கலைப் படைப்புகளில் வத்தேரா மகிளா, எல்லம்மா ஜோகி, கோபிகா கிருஷ்ணா, பந்த பொலாலு, வசந்த கேளி, கோலாட்டம், டாடி டேப்பர்ஸ், போனலு மற்றும் பதுகம்மா போன்ற கருப்பொருள்கள் இடம் பெற்றிருந்தன.

இறப்பு

தொகு

தனது 87வது வயதில் 20 ஆகஸ்ட் 2012 அன்று பார்கின்சன் நோயின் சிக்கல்களால் காலமானார். [3] [4] [5]

விருதுகள்

தொகு
  • 1975 இல் சித்ரகலா பிரபூர்ணா
  • 1988 இல் இந்திய அரசாங்கத்தின் மூத்த சகா
  • லலித் கலா அகாடமி
  • கலா பிரவீணா 1993
  • பாரதமுனி கலை அகாடமியின் கலா ரத்னா, 1993
  • கலா விபூசணா
  • ஆந்திர அரசின் ஹம்சா விருது
  • ஆந்திர அரசிடமிருந்து ராஜீவ் பிரதிபா புரஸ்கார்
  • 2007 லலித் கலா அகாடமியின் லலித் கலா ரத்னா.

சான்றுகள்

தொகு
  1. "NATIONAL / ANDHRA PRADESH : Folk artist Kapu Rajaiah passes away in Siddipet". 1925-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.
  2. Ens - Sangareddy. "Artist Kapu Rajaiah dead". The New Indian Express. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.
  3. "Artist Kapu Rajaiah dead - South India - Hyderabad - ibnlive". Ibnlive.in.com. Archived from the original on 2012-08-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.
  4. "::The Hans India::". Thehansindia.info. 1925-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-08-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Artist Kapu Rajaiah is no more". Archived from the original on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பு_ராஜையா&oldid=4110191" இலிருந்து மீள்விக்கப்பட்டது