காமவர்த்தனி
காமவர்த்தனி கருநாடக இசையின் 51 வது மேளகர்த்தா இராகம். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது. அசம்பூர்ன மேள பத்ததியில் காசிராமக்கிரியா என்றழைக்கப்பட்டது. இந்துஸ்தானி இசையில் பூர்வி தாட் என்று பெயர்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம2 க3 ரி1 ஸ |
- பிரம்ம எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகிறன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- இது ஒரு பழமையான இராகம்.
- காந்தாரத்தை அசைக்காமல் பாட வேன்டும்.
- கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- தாரச்தாயி காந்தாரத்திற்கு மேல் சஞ்சாரம் காண்பதரிது.
- ஜண்டசுர வரிசைப் பிரயோகங்கள், தாட்டு சுரப்பிரயோகங்கள், பிரத்தியாகத கமகங்கள் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
- பண்டைத்தமிழிசையில் "சாதாரிப்பண்" என்றழைக்கப்பட்டது. "நட்டராகம்" என்றும் அழைக்கப்பட்டது.[1]
- மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
- மூர்ச்சனாகாரக மேளம். இந்த இராகத்தின் நிஷாத மூர்ச்சனை கனகாங்கி என்ற முதல் மேளமாகும்.
உருப்படிகள்
தொகு- கிருதி : ஈசனே கோடி : மிஸ்ர சாபு : முத்துத் தாண்டவர்.
- கிருதி : ரகுவர நன்னு : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : குஞ்சித பதத்தை : ரூபகம் : கோபாலகிருஷ்ண பாரதியார்.
- கிருதி : சிவ சிவ என : மிஸ்ர சாபு : தியாகராஜர்.
- கிருதி : விசாலாட்சம் : மிஸ்ர சாபு : முத்துஸ்வாமி தீட்சிதர்.
ஜன்ய இராகங்கள்
தொகுகாமவர்த்தனியின் ஜன்ய இராகங்கள் இவை.
திரையிசைப் பாடல்கள்
தொகுகாமவர்த்தனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்:
- ஏழு ஸ்வரங்களுக்குள் - அபூர்வ ராகங்கள் (ஒரு புறம் பார்த்தால் என்ற வரிகளைத் தவிர)
- நின்னைச் சரணடைந்தேன் - பாரதி
மேற்கோள்கள்
தொகு- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.