காமினி நிர்மலா மெண்டிசு

இலங்கை அறிவியலாளர்

காமினி நிர்மலா மெண்டிசு (Kamini Nirmala Mendis) என்பவர் கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் உலக சுகாதார அமைப்பின் முன்னாள் மலேரியா நிபுணர் ஆவார்.

கல்வி

தொகு

கொழும்பிலுள்ள விசாக்கா வித்யாலயா பள்ளியில் மெண்டிசு கல்வி பயின்றார்.[1] 1972 ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பின்னர் 1980 ஆம் ஆண்டு முனைவர் பட்டத்திற்காக இங்கிலாந்திலுள்ள இலண்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.[2] நுண்ணுயிரியியலில் தன்னுடைய முதுநிலை கல்விக்காகவும் உரிய பயிற்சியை முடிக்கவும் தற்போது கொழும்பு பல்கலைக் கழகமாகப் பிரிக்கப்பட்டுள்ள தாயக கல்வி நிலையத்திற்குத் 1989 ஆம் ஆண்டு மீண்டும் இவர் திரும்பினார்.

தொழில்

தொகு

1983 ஆம் ஆண்டு சிறந்த குடிமக்களுக்கான தேசிய குடியரசு தலைவர் விருது 1983 ஆம் ஆண்டு காமினி நிர்மலா மெண்டிசுக்கு வழங்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு மெண்டிசு கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஒட்டுண்ணித் துறையில் மலேரியா ஆராய்ச்சிப் பிரிவை நிறுவினார். இப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பேற்று 17 ஆண்டுகள் வழிநடத்தினார்.[2][3][4] 1991 ஆம் ஆண்டு மெண்டிசுக்கு வெப்பமண்டல மருந்து மற்றும் சுகாதாரத்திற்கான இராயல் கழகத்தின் சால்மர் பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோல வெப்பமண்டல மருந்து மற்றும் சுகாதாரத்திற்கான அமெரிக்க சங்கத்தின் பெய்லி கே ஆசுபோர்டு பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது.[2][5]

1993 ஆம் ஆண்டு மெண்டிசு மற்றும் தையான் விர்து ஆய்வகங்கள் பிளாசுமோடியம் காலினேசியத்தின் புதிய டி.என்.ஏ வரிசையை மலேரியா செல்லுக்குள் செருகும் புதிய முறையின் வெற்றிகரமான பயன்பாட்டை வெளியிட்டன.[6] உலக சுகாதார அமைப்பின் கொள்கை ஆலோசனைக் குழுவில் மெண்டிசு தர்ஒது உறுப்பினராக உள்ளார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Visakha OGA honours its distinguished Old Girls". www.sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  2. 2.0 2.1 2.2 The NIH Record (in ஆங்கிலம்). U.S. Department of Health and Human Services, National Institutes of Health. 2000.
  3. "PDRU – History | FOM" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  4. "WHO | May you live in interesting times: malariologist reflects on elimination success". WHO. பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.
  5. "American Society of Tropical Medicine and Hygiene - MEDALS" (PDF). 2019. பார்க்கப்பட்ட நாள் 20 Dec 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. Goonewardene, R; Daily, J; Kaslow, D; Sullivan, T J; Duffy, P; Carter, R; Mendis, K; Wirth, D (1993). "Transfection of the malaria parasite and expression of firefly luciferase.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 90 (11): 5234–5236. doi:10.1073/pnas.90.11.5234. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:8506371. Bibcode: 1993PNAS...90.5234G. 
  7. "Becoming malaria-free by 2020". www.who.int (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-13.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_நிர்மலா_மெண்டிசு&oldid=3857426" இலிருந்து மீள்விக்கப்பட்டது