காமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம்
காமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம் (Kameshwar Singh Darbhanga Sanskrit University) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் அமைந்துள்ள ஓர் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இது சமசுகிருதம் கற்பித்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
வகை | மாநிலப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1961 |
வேந்தர் | பீகார் ஆளுநர் |
துணை வேந்தர் | சசிநாத் ஜா |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www.ksdsu.edu.in |
வரலாறு
தொகுகாமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம்1961-ல் நிறுவப்பட்டது. அறிஞர் உமேஷ் மிசுரா இதன் முதல் துணைவேந்தராக இருந்தார். ஒருங்கிணைந்த பீகாரின் அப்போதைய கல்வி அமைச்சர் சத்யேந்திர நாராயண் சின்கா பல்கலைக்கழகத்தின் துவக்கத்தினை அறிவித்தார். காமேசுவர் சிங் தனது மூதாதையர் ஆனந்த் பாக் அரண்மனையை சமசுகிருதத்தை மேம்படுத்துவதற்காகப் பல்கலைக்கழகமாகத் துவக்கப் பீகார் அரசுக்குத் தானமாக வழங்கினார். தற்போது, இந்த அரண்மனை பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகமாக உள்ளது.[1]
சமசுகிருத அறிஞரும் கவிஞருமான ராம் கரண் சர்மா 1974 முதல் 1980 வரை துணைவேந்தராக இருந்தார்.[2] இக்காலத்தில் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.
வளாகம்
தொகுகாமேசுவர் சிங் தர்பங்கா சமசுகிருத பல்கலைக்கழகம் லட்சுமீசுவர் விலாசு அரண்மனையில் அமைந்துள்ளது. இது தர்பங்காவில் உள்ள ஆனந்த் பாக் என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Umesh Mishra; author Govinda Jhā; at page 60
- ↑ Gayatree Sharma (2008-12-29). "Sanskrit has never been dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120323024809/http://articles.timesofindia.indiatimes.com/2008-12-29/patna/27922474_1_sanskrit-language-urdu-perfect-language.