காமேஸ்வரம்
காமேஸ்வரம் (Kameswaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, பாரம்பரிய விவசாயம் மற்றும் மீன்பிடி கிராமமாகும். அருகே வேளாங்கண்ணி உள்ளது. இந்த கிராமத்தில் கீறன் ஏரி, செயின்ட் செபஸ்தியார் மேல்நிலைப் பள்ளி, கோஹஜ் மருத்துவமனை, காமேஸ்வரர் கோயில் மற்றும் அழகிய கடற்கரை உள்ளது. இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் முக்கிய வணிக தொழிலாக உள்ளது.இக்கிராமம் வங்கக்கடல் ஓரத்தில் உள்ளது.
காமேசுவரம்
திருப்பூண்டி கிழக்கு | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°37′N 79°50′E / 10.61°N 79.83°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாகப்பட்டினம் |
வட்டம் | கீழ்வேளூர் |
ஊராட்சி ஒன்றியம் | கீழையூர் |
அஞ்சல் | 611110 |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | TN-51 |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
சட்டமன்றத் தொகுதி | கீழ்வேளூர் |
இவ்வூர் நாகப்பட்டினத்திற்கு தெற்கே சுமார் 20 கிமீ தொலைவிலும் மற்றும் வேளாங்கண்ணிற்கு தெற்கே சுமார் 10 கிமீ தொலைவிலும் உள்ளது.
காமேஸ்வரம் ஊராட்சி ஆனது, 2007ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களிடம் இருந்து,நிர்மல் புரஸ்கார்(சுகாதாரமான ஊராட்சி) விருதைப் பெற்றுள்ளது.