காரவிளை (Karavilai) என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமமாகும்.[1] இது நல்லூர் நகரப் பஞ்சாயத்திற்கு உட்பட்டது. அலுவலக மொழி தமிழாக இருந்தபோதும் கேரளாவுக்கருகில் இருப்பதால் பெரும்பான்மையான மக்கள் மலையாளம் மொழியைப் புரிந்துகொள்கின்றனர். இங்கிருந்து 1.5 கி.மீ தொலைவில் குழித்துறை இரயில் நிலையம் உள்ளது. 40 கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் விமானநிலையம் உள்ளது. 

காரவிளை
கிராமம்
காரவிளை is located in தமிழ் நாடு
காரவிளை
காரவிளை
ஆள்கூறுகள்: 8°17′46″N 77°13′03″E / 8.29613°N 77.21749°E / 8.29613; 77.21749
நாடுஇந்தியா இந்தியா
Stateதமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
629165
தொலைபேசி குறியீடு04651
வாகனப் பதிவுTN-75
அருகிலுள்ள நகரங்கள்மார்த்தாண்டம் & நாகர்கோவில் & திருவனந்தபுரம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி (பேரூராட்சி)
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிவிளவங்கோடு
கல்வியறிவு100%

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், Karavilai
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27
(81)
28
(82)
30
(86)
31
(88)
32
(90)
31
(88)
31
(88)
30
(86)
30
(86)
29
(84)
28
(82)
27
(81)
29.5
(85.1)
தாழ் சராசரி °C (°F) 22
(72)
22
(72)
23
(73)
24
(75)
25
(77)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
22
(72)
21
(70)
21
(70)
22.7
(72.8)
ஆதாரம்: [2]

[3]

போக்குவரத்து

தொகு

பேருந்து

தொகு

மார்த்தாண்டத்திலிருந்து காரவிளைக்கு பேருந்து வசதி உள்ளது. அருகிலுள்ள பள்ளன்விளை, காரவிளாகம் போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் உள்ளன. அவ்வூருக்கு அருகிலுள்ள பேருந்து நிலையம் மார்த்தாண்டமாகும். இவ்வூரிலிருந்து மார்த்தாண்டம் பேருந்து நிலையம் 2 கிமீ தொலைவிலுள்ளது.

வான்வழி

தொகு

இவ்வூருக்கு அருகாமையிலமைந்துள்ள விமானநிலையம் திருவனந்தபுரம் பன்னாட்டு விமானநிலையமாகும். இது 40 கிமீ தொலைவிலுள்ளது.

தொடருந்து சேவை

தொகு
 
குழித்துறை (மார்த்தாண்டம்) தொடருந்து நிலையம்

குழித்துறை (மார்த்தாண்டம்)[4] தொடருந்து நிலையம் காரவிளையிலிருந்து 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தொடருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, கோட்டயம், கொல்லம் ஆகிய ஊர்களுக்கு பயணியர் தொடருந்துகளும் சென்னை, மதுரை, பெங்களூரு, மும்பை ஆகிய ஊர்களுக்கு நேரடித் தொடருந்து சேவைகளும் உள்ளன.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Karavilai
  2. "Hydromet Division Updated/Real Time Maps". இந்திய வானிலை ஆய்வுத் துறை. Archived from the original on 18 September 2015. பார்க்கப்பட்ட நாள் 5 July 2015.
  3. "Kanyakumari Weather". Kanyakumari District. Archived from the original on 22 February 2015. பார்க்கப்பட்ட நாள் 5 July 2015.
  4. Kuzhithurai Railway Station Railway Station Rd, Marthandam, Tamil Nadu 629165 http://goo.gl/maps/eEsCX
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரவிளை&oldid=3810477" இலிருந்து மீள்விக்கப்பட்டது