காராக் கடல்

கடல்

காராக் கடல் (Kara Sea, உருசியம்: Ка́рское мо́ре, Karskoye more) சைபீரியாவின் வடக்கில் அமைந்துள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் அங்கமாகும். இது பேரன்ட்சு கடலிலிருந்து மேற்கில் காரா நீரிணைவாலும் நோவாயா செமியா தீவுக் கூட்டத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளது; கிழக்கில் செவமாயா செமியா தீவுக்கூட்டத்தால் லாப்டேவ் கடலிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இது உரால் பகுதி காரா ஆற்றை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆறு தற்போது அவ்வளவு குறிப்பிடத்தக்கதல்ல எனினும் வட சைபீரியாவை உருசியா ஆளுகைக்குட்படுத்தியக் கட்டத்தில் முதன்மை பங்கு வகித்தது.[2] காரா ஆற்றுக்கான பெயரே "சிறுகுன்றான அழுத்தப் பனிப்பரப்பு" எனப் பொருள்படும் நெனெத்து மொழிச்சொல்லிலிருந்து பெறப்பட்டது.[3]

காராக் கடல்
காராக் கடலின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம் .
அமைவிடம்ஆர்க்டிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்77°N 77°E / 77°N 77°E / 77; 77
வகைகடல்
வடிநில நாடுகள்உருசியா
மேற்பரப்பளவு926,000 km2 (358,000 sq mi)
சராசரி ஆழம்131 m (430 அடி)
நீர்க் கனவளவு121,000 km3 (98×10^9 acre⋅ft)
உறைவுநடைமுறையில் ஆண்டு முழுவதும்
மேற்கோள்கள்[1]

காராக் கடல் கிட்டத்தட்ட 1,450 கி.மீ நீளமும் 970 கி.மீ அகலமும் உடையது; இதன் பரப்பளவு ஏறத்தாழ 880,000 km2 (339,770 sq mi) ஆகும், சராசரி ஆழம் 110 மீட்டர்கள் (360 அடி).

அத்திலாந்திக்கிலிருந்து வெப்ப நீரோட்டத்தைப் பெறும் பேரன்ட்சு கடல் போலன்றி காராக்கடல் மிகவும் குளிர்ந்துள்ளது; ஆண்டின் ஒன்பது மாதங்களுக்கு உறைந்தே உள்ளது.

காராக் கடலுக்கு ஓபி ஆறு, எனிசே ஆறு, பியாசினா ஆறு, தைமிரா ஆறுகள் மூலமாக பெருமளவில் நன்னீர் வரத்துள்ளது. எனவே இதன் உப்புத்தன்மை மிகவும் மாறக்கூடியது.

இக்கடலில் நோவி துறைமுகமும் டிக்சன் குடியேற்றமும் முதன்மைத் துறைமுகங்களாக உள்ளன; இக்கடல் ஆண்டின் பெரும்பகுதி உறைந்திருந்தாலும் மீன் பிடித்தல் முதன்மைத் தொழிலாக உள்ளது. குறிப்பிடத்தக அளவில் பாறை எண்ணெய், இயற்கை எரிவளி இருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன; இவை இன்னமும் பயன்படுத்தபடவில்லை. 2014இல் இங்கு எண்ணெய்த் தேடலில் ஈடுபட்டிருந்த அமெரிக்க எக்சான் நிறுவனம் ஐக்கிய அமெரிக்க அரசுத் தடையால் செப்டம்பர் 26 வரை தனது இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்தது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. R. Stein, Arctic Ocean Sediments: Processes, Proxies, and Paleoenvironment, p. 37
  2. E.M. Pospelov, Geograficheskie nazvaniya mira (Moscow, 1998), p. 191.
  3. V.Yu. Vize, Karskoye more // Morya Sovetskoy Arktiki: Ocherki po istorii issledovaniya (Leningrad, 1939) — pp. 180—217
  4. Sanksjoner kan avslutte boring i Karahavet
"https://ta.wikipedia.org/w/index.php?title=காராக்_கடல்&oldid=2558648" இலிருந்து மீள்விக்கப்பட்டது