காரைக்கால் நகராட்சி

காரைக்கால் நகராட்சி, புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் இருக்கும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரே நகராட்சி. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தின் 49 விழுக்காடு மக்கள் நகரப்பகுதியில் வசிக்கிறார்கள். புதுச்சேரி அரசின் உள்ளாட்சித் துறையின் கீழ் நகராட்சியின் நிர்வாகம் செயல்படுகிறது. உள்ளாட்சித் துறையின் இயக்குனர் அவர்கள் நகராட்சி ஆணையரை வழிநடத்துகிறார். 2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் காரைக்கால் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை - 86838, ஆண்களின் மக்கள் தொகை - 42261, பெண்களின் மக்கள் தொகை - 44577.

வரலாறு தொகு

12-03-1880 முதல் பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரெஞ்சு பெருநகர தீர்ப்பாணை மூலம் 12 வார்டுகள் கொண்ட நகராட்சியாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி அந்த வார்டில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களது பதவி காலம் 6 ஆண்டுகள்.

நகராட்சியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் தொகு

  1. காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் காரைக்கால் நகராட்சியின் 1, 2, 3, 4, 5, 8, 9 ஆகிய வார்டுகள்
  2. காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் காரைக்கால் நகராட்சியின் 6, 7, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 ஆகிய வார்டுகள்

நகராட்சி எல்லைக்குள் உள்ள வருவாய் கிராமம் தொகு

  1. அக்கரைவட்டம்
  2. கீழமனை
  3. கீழகாசாக்குடி
  4. தலத்தெரு
  5. கீழவெலி
  6. காரைக்கால்
  7. கோவில்பத்து

நகராட்சி வார்டுகள் தொகு

  1. கீழகாசாக்குடி(பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது)
  2. தலத்தெரு
  3. அம்மன்கோவில்பத்து (பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது)
  4. கோவில்பத்து
  5. புளியங்கொட்டை சாலை (பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது)
  6. தர்மபுரம்
  7. தண்ணீர் தொட்டி (பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது)
  8. வளத்தெரு
  9. மைதீன்பள்ளி (பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது)
  10. அம்மையார் கோயில்
  11. காதர்சுல்த்தான்
  12. கொத்துகுளம்
  13. அந்தோனியார் கோயில்
  14. மாதாகோயில்
  15. மதகடி
  16. கிராம்புத்தோட்டம்
  17. ஓடுதுறை(பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது)
  18. அக்கரைவட்டம்

நகராட்சியிலுள்ள பள்ளிகள் தொகு

அரசுப் பள்ளிகள் தொகு

  • ஆரம்பப் பள்ளி - 13
  • நடுநிலைப் பள்ளி - 1
  • உயர்நிலைப்பள்ளி - 8
  • மேல்நிலை - 3

தனியார் பள்ளிகள் தொகு

  • ஆரம்பப் பள்ளி - 7
  • நடுநிலைப் பள்ளி - 3
  • உயர்நிலைப்பள்ளி - 8
  • மேல்நிலை - 6

மேலும் பார்க்க தொகு

காரைக்கால் வட்டம்

வெளியிணைப்புகள் தொகு

  1. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf
  2. http://karaikal.gov.in/
  3. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம்
  4. http://schooledn.puducherry.gov.in/HTML/statistics/schl201516/govtpvt.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  5. http://statistics.puducherry.gov.in/new%20update/ATA%20GLANCE%202015/PUDUCHERRY%20AT%20A%20GLANCE.pdf பரணிடப்பட்டது 2016-09-11 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்_நகராட்சி&oldid=3265249" இலிருந்து மீள்விக்கப்பட்டது