கார்சுபீல்டின் மூஞ்சூறு
கம்போடியா, சீனா, இந்தியா, ஜப்பான், இலாவோசு, நேபாளம், பூட்டான், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படும் சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டி இனம் கார்சுபீல்டின் மூஞ்சூறு (Horsfield's shrew)(குரோசிடுரா ஹார்சுபீல்டி) ஆகும்.
கார்சுபீல்டின் மூஞ்சூறு Horsfield's shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. horsfieldii
|
இருசொற் பெயரீடு | |
Crocidura horsfieldii தாம்சு, 1856) | |
கார்சுபீல்டின் மூஞ்சூறு பரம்பல் |
விளக்கம்
தொகுஇதன் தலை மற்றும் உடல் நீளம் சுமார் 6 முதல் 7 செ.மீ வரையும், வால் நீளம் 5 முதல் 6 செ.மீ. வரை இருக்கும். இதன் நிறம் மேலே மங்கலான பழுப்பு நிறமும், கீழே மங்கலான சாம்பல் நிறமும் கொண்டது. இது பிக்மி மூஞ்சூறுவிலிருந்து பெரிய கருப்பு நிற பாதத்தின் காரணமாக வேறுபடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Molur, S. (2016). "Crocidura horsfieldii". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T41324A22307854. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T41324A22307854.en. http://www.iucnredlist.org/details/41324/0. பார்த்த நாள்: 12 December 2017.
- பூச்சிஉண்ணி நிபுணர் குழு 1996. குரோசிடுரா ஹார்சுஃபீல்டி . 2006 ஐ.யூ.சி.என் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 30 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.