கார்டெல் ஹல்

கார்டெல் ஹல் ( Cordell Hull அக்டோபர் 2, 1871  – ஜூலை 23, 1955) டென்னசியில் பிறந்த ஓர் அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் மிக நீண்ட காலம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக அறியப்பட்டார், இரண்டாம் உலகப் போரின் போது ஜனாதிபதி பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் நிர்வாகத்தில் 11 ஆண்டுகள் (1933-1944) இந்தப் பதவியை வகித்தார். ஐக்கிய நாடுகள் சபையை நிர்வகிப்பதில் இவரின் பங்களிப்பிற்காக 1945 ஆம் ஆண்டில் ஹல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார், மேலும் இவரை குடியரசுத் தலைவரான ரூஸ்வெல்ட் "ஐக்கிய நாடுகளின் தந்தை" என்று குறிப்பிடப்பட்டார். [1]

டென்னசி ஒலிம்பஸில் பிறந்த இவர், கம்பர்லேண்ட் ஸ்கூல் ஆஃப் லாவில் பட்டம் பெற்ற பிறகு தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். அவர் டென்னசி பிரதிநிதிகள் சபை தேர்தலில் வெற்றி பெற்றார் மற்றும் எசுப்பானிய-அமெரிக்க போரின் போது கியூபாவில் பணியாற்றினார். அவர் 1907 முதல் 1921 வரை மற்றும் 1923 முதல் 1931 வரை அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டென்னஸியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் . ஹவுஸ் வேஸ் அண்ட் மீன்ஸ் கமிட்டியின் உறுப்பினராக, ஹல் 1913 ஆம் ஆண்டின் வருவாய் சட்டத்தையும், 1916 ஆம் ஆண்டின் வருவாய் சட்டத்தையும் நிறைவேற்ற உதவினார்.

ஹல் 1930 இல் நடைபெற்ற ஆட்சிக் குழுத் தேர்தலில் வெற்றி பெற்றார், ஆனால் 1933 இல் ஆட்சிக் குழுவில் இருந்து தனது பதவியினை ராஜினாமா செய்தார். லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டைத் தவிர்க்க முயன்றார். உடல்நலக் குறைவு காரணமாக 1944 இல் ஹல் மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஹல் கீழவையில் (1907-1921 மற்றும் 1923-1931) பதினொரு முறை பணியாற்றினார் மற்றும் 1913 மற்றும் 1916 ஆம் ஆண்டு கூட்டாட்சி வருமான வரிச் சட்டங்களையும் 1916 இன் பரம்பரை வரியையும் உருவாக்கினார். 1920 இல் தேர்தல் தோல்வியின் பின்னர், ஹல் ஜனநாயக தேசியக் குழுவின் தலைவராக பணியாற்றினார். பின்னர் 1930 இல் மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் 1933 இல் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது பதவியினை ராஜினாமா செய்தார். மேலைவையில் இவர் 30 ஆண்டுகள் பணியாற்றினார்.

1933 ஆம் ஆண்டில், ஹல் குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வு பெறும் வரை 11 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதில் முக்கிய நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1943 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பட்டயத்தினை உருவாக்கினார் . உடல்நலம் சரியில்லாததால் நவம்பர் 30, 1944 அன்று அவர் மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கோர்டல் ஹல் டென்னசி, ஒலிம்பஸில் ஒரு மரக் கட்டை குடிலில் பிறந்தார், இது இப்போது டென்னசி, பிக்கெட் கவுண்டியின் ஒரு பகுதியாக உள்ளது. அவர் வில்லியம் பாசல் ஹல் (1840-1923) மற்றும் மேரி எலிசபெத்தின் ஐந்து மகன்களில் மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவரது சகோதரர்களுக்கு ஓரெஸ்டெஸ் (1868), சனடியஸ் (1870), வயோமிங் (1875) மற்றும் ராய் (1881) என்று பெயரிடப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. Hulen, Bertram D. (1946-10-25). "Charter Becomes 'Law of Nations', 29 Ratifying It". த நியூயார்க் டைம்ஸ்: p. 1. https://www.nytimes.com/learning/general/onthisday/big/1024.html. பார்த்த நாள்: May 5, 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டெல்_ஹல்&oldid=2907340" இலிருந்து மீள்விக்கப்பட்டது