கார்ட்டர் பாம்பு
கார்ட்டர் பாம்பு | |
---|---|
Red-sided Garter Snake Thamnophis sirtalis parietalis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தம்னோபிசு (Thamnophis) |
இனங்கள் | |
See Taxonomy section. |
கார்ட்டர் பாம்பு என்பது தம்னோபிஸ் (Thamnophis) இனத்தின் கீழ் வரும் வடஅமெரிக்கப் பாம்பினமாகும். சாதாரணமாக கனடாவில் இருந்து நடு அமெரிக்கா வரை காணப்படுகின்றன.[1][2][3]
குறிப்பு
தொகுஇப்பாம்புகளின் முதுகுப்புறத்தில் நெடுக்குவாட்டில் ஒன்று அல்லது மூன்று வரிகள் (அல்லது பட்டைகள்) பொதுவாக சிவப்பு, மஞ்சள், அல்லது வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. மேலும் ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த பாம்புகள் வெவ்வேறு நிற வரிகளைக் கொண்டிருப்பதும் உண்டு. பெரும்பாலான கார்ட்டர் பாம்புகள் 60 செ.மீ நீளத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனினும், இதனை விட நீளமாகவும் வளரக்கூடும். த.கிகாசு (T. gigas) என்னும் சிற்றினம் 160 செ.மீ நீளம் வரை வளரக்கூடியது.
உணவு முறை
தொகுகார்ட்டர் பாம்புகள் ஊனுண்ணிகள் ஆகும். இவை தங்களால் வெல்லப்படக்கூடிய விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. மண்புழு, பூச்சிகள், அட்டைகள், நிலநீர் வாழிகள், மீன், ஊர்வன, கொறிணிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். சிலவேளைகளில் இவை முட்டைகளையும் உட்கொள்கின்றன. இரையை கார்ட்டர் பாம்புகள் முழுதாக விழுங்குபவையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wright AH, Wright AA (1957). Handbook of Snakes of the United States and Canada. Ithaca and London: Comstock Publishing Associates, a division of Cornell University Press. 1,105 pp. (in 2 volumes). (Thamnophis, p. 755).
- ↑ "ITIS Standard Report Page: Thamnophis". www.itis.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-07-06.
- ↑ "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/en. பார்த்த நாள்: 2019-07-06.