கார்த்திகா அங்கமுத்து

இந்திய கால்பந்து வீரர்

கார்த்திகா அங்கமுத்து (Karthika Angamuthu: பிறப்பு நவம்பர் 21,1999) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் இந்திய மகளிர் லீக்கிலும், இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணியிலும் கிழக்கு வங்காள அணிக்காக நடுக்கள வீரராக விளையாடுகிறார். சேது அணி மற்றும் ஒடிசா அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

கார்த்திகா அங்கமுத்து
Karthika Angamuthu
சுய தகவல்கள்
பிறந்த நாள்21 நவம்பர் 1999 (1999-11-21) (அகவை 25)
பிறந்த இடம்காரிப்பட்டி,
சேலம், தமிழ்நாடு, இந்தியா
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ஈஸ்ட் பெங்காள் (மகளிர்)
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
சேது
2022இலார்ட்ஸ் அணி கொச்சி
2022–2024ஒடிசா
2024–ஈஸ்ட் பெங்காள் (மகளிர்)
பன்னாட்டு வாழ்வழி
2021–இந்திய தேசிய மகளிர் அணி13(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 12 ஜூலை 2024 அன்று சேகரிக்கப்பட்டது.

வாழ்க்கை

தொகு

கார்த்திகா தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர் பருத்தி ஆலை தொழிலாளர்களாக இருக்கின்றனர். இவர் தனது 15 வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கினார்.[1][2] ஆரம்பத்தில், பெற்றோர் தங்கள் மகளை வெளிமாநில பயணங்களுக்கு அனுப்ப தயங்கினர். ஆனால் பின்னர் இவரது வெற்றியைப் பார்த்த பிறகு இவரை ஊக்குவித்தனர்.[3]

விளையாட்டு

தொகு

2019 ஆம் ஆண்டில் கார்த்திகா ஹீரோ இந்திய மகளிர் லீக்கில் விளையாடத் தொடங்கினார். இதில் காட்டிய திறமையால் இவர் இந்திய தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திசம்பர் 2021 இல் வெனிசுலாவில் இந்தியாவின் மூத்தோர் அணியில் அறிமுகமானார்.[4] ஜனவரி 2022 இல், ஏஎஃப்சி மகளிர் ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணியில் இவரது பெயர் இடம்பெற்றது.[5] 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், தாஷ்கந்துவில் உசுபெக்கிசுத்தானுக்கு எதிரான சர்வதேச நட்பு போட்டியில் விளையாடினார். ஏப்ரல் மாதத்தில், கிர்கிசுத்தானின் பிசுக்கெக்கில் நடந்த மகளிர் ஒலிம்பிக் தகுதி சுற்றில் விளையாடிய இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.[6] பின்னர், சென்னையில் நேபாளத்திற்கு எதிராக இரண்டு நட்புப் போட்டிகளில் விளையாடினார்.[7][8] ஜூன் மாதம், பஞ்சாபின் அமிர்தசரசில் நடைபெற்ற மூதோர் மகளிர் தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழகத்திற்காக விளையாடினார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "These women footballers are taking the field by storm". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/football/these-women-footballers-are-taking-the-field-by-storm/articleshow/98553821.cms. 
  2. Bontra, Soumya (2022-01-20). "Meet the 23 players who can create history for Indian football". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
  3. "These TN women footballers dribble past challenges and make it to the national team". The Times of India. 2022-03-09. https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/these-tn-women-footballers-dribble-past-challenges-and-make-it-to-the-national-team/articleshow/90091475.cms. 
  4. "AFC Asian Cup 2022: Meet India's 23-member squad". ESPN (in ஆங்கிலம்). 2022-01-14. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  5. "Hosts India name 23-member squad for AFC Women's Asian Cup, recovering Bala Devi misses out". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 2022-01-11. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  6. "Coach Dennerby names India squad for Olympic Qualifier Round 1 | Nagaland Post" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-30. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  7. Bhattacharjee, Neeladri (2023-02-14). "Frontline to front-line: TN girl Indumathi set to lead India as Chennai hosts an international match after 15 years". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  8. "Int'l football returns to Chennai today". www.dtnext.in (in ஆங்கிலம்). 2023-02-15. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  9. "Tamil Nadu to clash with Haryana in Senior Women's National Football Championship". www.aninews.in. 2023-06-27. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்திகா_அங்கமுத்து&oldid=4106460" இலிருந்து மீள்விக்கப்பட்டது