கார்த்தி செல்வம்
கார்த்தி செல்வம் (Selvam Karthi ) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வளைதடிப் பந்தாட்ட வீரராவார். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய வளைதடிப் பந்தாட்ட அணியில் கார்த்தி ஒரு முன்கள ஆட்டக்காரராக விளையாடுகிறார். 2022 ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய தேசிய அணியில் ஓர் உறுப்பினராகவும் உள்ளார்.[1]
தனித் தகவல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 1 செப்டம்பர் 2001 தமிழ்நாடு, இந்தியா | ||||||
விளையாடுமிடம் | முன்களம் | ||||||
தேசிய அணி | |||||||
2018–2022 | இந்தியா 21 வயதினருக்கு கீழ் | ||||||
2022– | இந்தியா | 1 | (1) | ||||
பதக்க சாதனை
| |||||||
Last updated on: 23 மே 2022 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகார்த்தி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அரியலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தை செல்வம் அரசு கல்லூரியில் காவலாளியாக பணிபுரிகிறார். இவருடைய குடும்பத்தில் பிறந்துள்ள மூன்று குழந்தைகளில் இரண்டாவது குழந்தை கார்த்தி செல்வம் ஆவார். [2]
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அமைப்பான விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வந்த கோவில்பட்டியில் உள்ள விளையாட்டு விடுதியில் வளைதடி பந்தாட்ட வீரராக கார்த்தி பயிற்சி பெற்றார். 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவர் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள எசு.எசு.துரைசாமி மாரியம்மாள் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். [3]
தொழில்
தொகு2018 ஆம் ஆண்டில், இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் தமிழ்நாட்டிற்காக விளையாடுகையில் தொடர்ச்சியான சிறந்த செயல்பாட்டிற்குப் பிறகு கார்த்தி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய தேசிய அணியில் சேர்க்கப்பட்டார். [2] 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இவர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஒருவராக இடம் பெற்றார்.[4] மாரீசுவரன் சக்திவேலுடன் இணைந்து, கடந்த 13 வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து இந்திய தேசிய அணிக்குத் தெரிவான முதல் நபர் கார்த்தி செல்வன் ஆவார். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "India vs Pakistan Asia cup-அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து தமிழக வீரர் கார்த்தி சாதனை - இந்தியா-பாகிஸ்தான் டிரா". News18 Tamil. 2022-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-05-23.
- ↑ 2.0 2.1 "For Junior Men's Hockey Striker S Karthi, hopes are pinned on hockey for a financially stable life". Hockey India (in ஆங்கிலம்). 9 January 2021. Archived from the original on 23 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link). Hockey India. 9 January 2021. Archived from the original on 23 May 2022. Retrieved 23 May 2022. - ↑ Dass, S. Godson Wisely (12 May 2022). "Two Kovilpatti players make it into Indian hockey squad". The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/may/12/twokovilpatti-players-make-it-into-indian-hockey-squad-2452500.html.
- ↑ மே 23, பதிவு செய்த நாள்:; 2022. "கடைசி நேரத்தில் இந்தியா 'டிரா' * கோல் அடித்து அசத்திய கார்த்தி செல்வம்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Asia Cup 2022: In Tamil Nadu, All Eyes Are On Two Youngsters Who Ended A 13-Year Hockey Drought" (in en). 23 May 2022. https://news.abplive.com/tamil-nadu/asia-cup-2022-hockey-begins-today-who-are-tn-youngsters-who-ended-a-13-year-drought-know-details-ind-vs-pak-hockey-match-1533083.
புற இணைப்புகள்
தொகு- வளைதடி பந்தாட்டம் இந்தியாவில் செல்வம் கார்த்தி சுயவிவரம்