கார்த்யாயனி தேவி கோயில், சேர்த்தலா

சேர்த்தலா கார்த்யாயனி தேவி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில் ஆகும். இரட்டியும் தாடியும் இக்கோயிலின் புகழ்பெற்ற விழாக்களாகும். இக்கோயிலின் பூரம் வழிபாடு கேரளாவின் இரண்டாவது பிரபலமான பூரம் விழாவாகக் கருதப்படுகிறது.

கார்த்யாயனி தேவி கோயி

புராணங்கள், நம்பிக்கைகள்

தொகு

புகழ்பெற்ற இந்திய துறவி வில்வமங்கலம் சுவாமியார் இக்கோயிலின் மூலவரைவியை பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது. [1] திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் மூலவரான 'பத்மநாப சுவாமி'யை பிரதிஷ்டை செய்துவிட்டுத் திரும்பிச் செல்லும் வழியில் இவ்விடத்தில் தேவியை தரிசனம் செய்து, இத்தலத்தில் மூலவரை பிரதிஷ்டை செய்தார் என்பது பிரபலமான நம்பிக்கையாகும். இம்மூலவர் 'மாங்கல்ய தாயினி' என்றும் புகழ் பெற்றுள்ளார். அவர் பக்தர்களுக்கு நலனையும், செழிப்பையும் வழங்குவதோடு பெண்களின் திருமணத்திற்குத் தடைகளை நீக்கி அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

தொகு

பொதுவாக கேரளாவின் பிற கோயில்களில் காணப்படுகின்ற ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்ற சடங்கான 'ஆராட்டு' இங்கு கொண்டாடப்படுகிறது. விழாக்காலத்தில் சோட்டாணிக்கரா தேவி கோயிலில் [2] தினமும் ஆராட்டு நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டு விழாவின் போது தினமும் இரண்டு முறை ஆறாட்டு நடைபெறுகிறது. மலையாள மாதமான விருச்சிகத்தின் கார்த்திகை நட்சத்திர நாளும் இங்கு விழா கொண்டாடப்படுகின்ற சிறப்பான நாளாகும்.

மேலும் பார்க்கவும்

தொகு

ஆனந்தவல்லீஸ்வரம் கோவில், கொல்லம் ஸ்ரீவராஹம் லட்சுமி வராஹ கோவில், திருவனந்தபுரம்

மேற்கோள்கள்

தொகு
  1. sree padmanabhaswamy temple
  2. chotanikara Devi Temple

வெளி இணைப்புகள்

தொகு

சேர்த்தலா கார்த்யாயனி தேவி கோயில்- http://kerala-delightfulartsandculture.blogspot.in/2012/03/cherthala-karthayani-devi-temple.html